இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
வெள்ளிக் கிழமையான இன்று அம்மனுக்கு உகந்த நாள் இன்றைய நாளுக்கான 12 வாசிகளுக்கு ராசிபலன்களை காண்போம்.
இன்றைய ராசிபலன்:
மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது நல்லது. திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அடிக்கடி உணர்ச்சிவசப்பட நேரிடும் என்பதால் சற்று நிதானத்தை கைக்கொள்ளும். மற்றபடி கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
ரிஷபம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் உங்களுடன் அனுசரித்துச் செல்வார்கள். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்
மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். காலையில் சற்று அலைச்சல்கள் இருந்தாலும் பிற்பகலில் ஓய்வு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஒரு சில பற்றாக் குறைகள் இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு சமாளிப்பீர்கள்.
கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள்.
சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க இருக்கும்.
கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
அன்பர்களுக்கு சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும். இவற்றில் வெற்றியும் கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். நீங்கள் எதிர்பாராத தனவரவு உண்டாகும்.
துலாம் இன்றைய ராசிபலன் – Libra
அன்பர்களே சிறந்த நாளாகும் நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உண்டாகும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள் குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்று இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சில வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் கணவன் மனைவி உறவு நிலை நன்றாக இருந்து வரும். கட்டுமான தொழில் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலமாக இருக்கும்.
தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நாளில் முற்பகுதியில் சற்று அலைச்சல்கள் காணப்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு அன்னியோன்யமாக இருக்கும்.
மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி தருவதாக இருக்கும்.
கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக செல்லும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி தவழும் பொருளாதாரத்தில் ஏற்றம் காணும் நாளாக இன்றைய நாள் அமையும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் படித்து கொண்டு இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள்.
மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
அன்பர்களுக்கு இன்றைய நாள் பிறந்த நாள் ஆகும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடைவதற்கு இருக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் தங்களுடைய முயற்சி வெற்றியடைந்து வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். இவை தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும்.
இன்றைய பஞ்சாங்கம்:
நாள் : சுபகிருது வருடம் சித்திரை மாதம் 2ம் தேதி வெள்ளிக்கிழமை 15.4.2022
திதி : இன்று அதிகாலை 03.23 மணி வரை திரியோதசி திதி பின்னர் சதுர்த்தசி.
நட்சத்திரம் : காலை 09.06 மணி வரை உத்திரம் நட்சத்திரம் பின்னர் அஸ்தம்.
நாமயோகம் : இன்று காலை 07.09 மணி வரை துருவம் பின்னர் வியாகாதம்.
கரணம் : இன்று அதிகாலை 03.23 மணிவரை தைத்தூலம்.அதன்பிறகு மாலை 02.58 மணிவரை கரசை. பின்னர் வணிசை.
அமிர்தாதி யோகம்: இன்று காலை 06.02 மணி வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்
காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
பகல்: 12.00 முதல் 01.30 மணி வரை
மாலை: 01.30 முதல் 02.30 மணிவரை
இரவு: 06.30 முதல் 07.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.
நேத்திரம்: 2 – ஜீவன்: 1