ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன்:

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மனதில் ஒரு புதிய தொழில், வேலை தொடங்குவதற்கான எண்ணம் மனதில் தோன்றும். புதிய நட்பு, பெரிய மனிதரின் அறிமுகம் கிடைக்கும். உங்கள் பொறுப்பை சரியான நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். ஆபத்தான மற்றும் பிணைய வேலையைத் தவிர்க்கவும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு மிகவும் மனமகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்திற்கான செலவு அதிகரிக்க வாய்ப்பு அதிகம். பயணங்கள் மகிழ்ச்சியைத் தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். கையில் எடுக்கும் எந்தப் பணியிலும் வெற்றி பெறுவீர்கள். சொத்து வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்ட காரியங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது.

மிதுனம்: மிதுன ராசிக்கு குடும்பத்திலும், பணியிடத்திலும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் தரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். உங்களின் குடும்பத்தினர் விரும்பிய பொருளை வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த நாளக இருக்கும்.

கடகம்:

கடக ராசிக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் எதிரிகளை சிறப்பாக சமாளித்து முன்னேறக்கூடிய நாள். குடும்பத்தில் சண்டை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், நண்பர்களின் ஆதரவும் பெறுவீர்கள். சொத்து வாங்குவதற்கான வாய்ப்பும், விற்பனை மூலம் நல்ல லாபம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். அதிக செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சிக்கனமாக செயல்படவும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்கு சுறுசுறுப்பு நிறைந்த நாளாக இருக்கும். கடின உழைப்பின் பலன் இன்று நிச்சயம் கிடைக்கும். திருமண விழா அல்லது சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

கன்னி: கன்னி ராசிக்கு இன்று ஏற்ற இறக்கமான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது பணியிடத்தில் உங்களின் செயலுக்கு பாராட்டு கிடைக்கும். நீங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணத்தை செலவிடுவீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

துலாம்: இன்று துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும். உங்களின் இனிமையான பேச்சால் மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். புத்திசாலித்தனமான செயல் உங்கள் வேலையை எளிதாகவும், வெற்றிகரமாகவும் முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு திறமையான ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். ஒருவரை அதிகமாக நம்புவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும் சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். ரியல் எஸ்டேட் கட்டிட தொழில் வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலை வாங்கக் கூடிய நாள்.

தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும் செய்யும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்து தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் நன்மையில் முடியும். ஒரு சிலருக்கு வலி நல்லது முதுகு வலி சிறிய அளவில் வந்து செல்லும்.

மகரம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சமமான நாளாக செல்லும். எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும். வேலை தேடுபவர்களுக்கும் வெளிநாட்டு பிரயாணம் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும் நாள் ஆகும்

கும்பம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். வியாபாரம் சேவைத் தொழில் பத்திரிகைத் தொழில் கலைத்துறை வாகன தொழில் அரசு நிர்வாகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும். தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முற்பகலில் வெற்றி அடையும்.

மீனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். சுபச் செலவுகள் நாளின் பிற்பகுதியில் தேடிவரும். சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.

இன்றைய பஞ்சாங்கம்

நாள் : சுபகிருது வருடம் சித்திரை மாதம் 01ம் தேதி வியாழக்கிழமை 14.4.2022

திதி : இன்று அதிகாலை 03.40 மணி வரை துவாதசி திதி. பின்னர் திரியோதசி.

நட்சத்திரம் : காலை 08.48 மணி வரை பூரம் நட்சத்திரம். பின்னர் உத்திரம்.

நாமயோகம் : இன்று காலை 08.29 மணி வரை விருத்தி. பின்னர் துருவம்.

கரணம் : இன்று அதிகாலை 03.40 மணிவரை பாலவம்.அதன்பிறகு மாலை 03.31 மணிவரை கௌலவம். பின்னர் தைதுலம்.

அமிர்தாதி யோகம்: இன்று காலை 06.03 மணி வரை அமிர்தயோகம். பின்னர் 08.48 மணி வரை சித்தயோகம். பின்பு மரணயோகம்.

நல்ல நேரம்

காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
பகல்: 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை: 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.

சூலம்: தெற்கு. பரிகாரம்: தைலம்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *