ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம் மேஷம் முதல் மீனம் வரையில் இன்றைய ராசிபலன் பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் வேலையைச் சிறப்பாக செய்து நற்பெயர் பெறுவீர்கள். உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். வருங்காலம் குறித்த யோசனையும், சேமிப்பையும் முன்னெடுப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதமாகலாம். உங்களின் புத்திசாலித்தால் உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு மிகவும் மன மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். உடல் நலம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வியாபாரத்தில் சில புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். வெற்றி பெறுவதற்காக எப்படிப்பட்ட ஆபத்தான முறைகளைக் கையாள தயங்கமாட்டீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசியினர் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் மன வேதனையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். தடைப்பட்ட வேலையை முடிக்க முயற்சிக்கலாம். தொழில், வியாபாரத்தில் கவனமாக உங்கள் செயல்பாடுகளைக் கையாளவும். காப்பீடு அல்லது முதலீடு விஷயங்கள் குறித்து சிந்திப்பீர்கள். சிறிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல பலன் தரக்கூடியதாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி, தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும்

கடகம்:
கடக ராசிக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். உங்களின் நல்ல நடத்தையால் உங்களை சுற்றியுள்ளவர்களைக் கவர்வீர்கள். புதிய யோசனைகள், திறமைகளின் வெளிப்பாட்டால் முழுப் பலன் பெறுவீர்கள். பணி மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வியாபார கிளை அல்லது பணி விரிவாக்கத்திற்காகக் கடன் வாங்க நேரிடலாம். பண விஷயத்தில் சாதகமான பலன் கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். முன்னேற்றம் காண கடினமாக உழைப்பீர்கள்.

சிம்மம்:
சிம்மம் ராசிக்கு பல வகையில் அதிர்ஷ்டம் ஆதரிக்கக்கூடிய நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் உங்கள் செயல்களை முன்னெடுப்பீர்கள். புதிய வருமான ஆதாயங்களைப் பெறுவீர்கள். பொருளாதார நிலைமை முன்பை விட வலுவாக இருக்கும்.

கன்னி: கன்னி ராசிக்கு அதிர்ஷ்ட பலன் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும் புதிய யோசனை, திட்டங்கள் உங்களை நிதி ரீதியான பலன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அசையா சொத்துக்கள் விற்பது தொடர்பான பிரச்னைகள் தீரும். புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. உங்கள் பணி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும்.

துலாம்: துலாம் ராசிக்கு நல்ல செய்திகள் கிடைக்கக்கூடிய நாள். உங்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். இருப்பினும் நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு செயலிலும் கவனம் செலுத்துவது நல்லது. முக்கிய வேலை ஒன்றை செய்து முடித்து மன நிறைவு பெறுவீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு நற்பலன் அதிகம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பொதுவாக எதையும் நினைத்து வருத்தப்பட மாட்டீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு முழுமையாக இருக்கும். பிள்ளைகள் வகையில் ஆதாயமும், ஆதரவும் இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் ஆச்சரியங்கள் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். நேர்மையான மனதுடன் செய்யக்கூடிய எந்த ஒரு செயலிலும் நல்ல வெற்றி மன நிறைவு தரும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் லாபகரமான பலன் தரும். பணப் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். கலைஞர்களுக்கு சாதகமான இருக்கும். அற்ப பேராசையிலிருந்து விலக்கி இருக்கவும்.

மகரம்:
மகர ராசிக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகள், திட்டங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

கும்பம்:
கும்ப ராசிக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு வேலையை சிறப்பாக செயது முடிப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது குடும்ப உறுப்பினர்களின் தகுந்த ஆலோசனை செய்வது நல்லது.
ஆடை, ஆபரண பாக்கியம் உண்டு. பெண்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிரிகளை எளிதாக கையாள்வீர்கள்.

மீனம்: மீன ராசியினர் இன்று எந்த ஒரு விஷயத்தையும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணி தொடர்பான விஷயங்களில் படிப்படியாக முன்னேற்றம் காணப்படும். இணைந்து வேலை செய்வார்கள். பெரிய தொழில் சம்பந்தமான எந்த பிரச்சனையும் தீர்க்கப்படும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியான தருணங்களைக் கழிப்பீர்கள். உறவுகளில் சில புதிய புத்துணர்ச்சி ஏற்படும்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : பிலவ வருடம் பங்குனி மாதம் 30ம் தேதி புதன்கிழமை 13.4.2022

திதி : இன்று அதிகாலை 03.29 மணி வரை ஏகாதசி திதி பின்னர் துவாதசி .

நட்சத்திரம் : காலை 08.08 மணி வரை மகம் நட்சத்திரம் பின்னர் பூரம்.

நாமயோகம் : இன்று காலை 9.24 மணி வரை கண்டம் பின்னர் விருத்தி.

கரணம் : இன்று அதிகாலை 03.29 மணிவரை பத்தரை.அதன்பிறகு மாலை 03.35 மணிவரை பவம். பின்னர் பாலவம்.

அமிர்தாதி யோகம்: இன்று காலை 08.08 மணி வரை சித்தயோகம். பின்னர் அமிர்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
பகல்: 01.30 முதல் 02.30 மணிவரை
மாலை: 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
குளிகை: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.

சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *