இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
இன்றைய கிரக நிலவரப்படி12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்
மேஷம்:
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும் நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள். தனவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வெளியூர் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும்.
ரிஷபம்:
இன்றைய நாள் சமமான நாளாக செல்லும். எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும். வேலை தேடுபவர்களுக்கும், வெளிநாட்டு பிரயாணம் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும் நாள் ஆகும்.
மிதுனம்:
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வேலை கிடைக்க வாய்ப்புண்டு. பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும்.
கடகம்:
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவியிடையே பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் குடும்ப அமைதி நன்றாக இருக்கும் தொழில் முயற்சிகள் வெற்றியடையும். புதிய தொழில் வாய்ப்புகள் காண பெறுவீர்கள்.
சிம்மம்:
கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும் உடல் நலம் நன்றாக இருந்து வரும். வாகன வகையில் அனுகூலம் உண்டு பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.
கன்னி:
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் அனுசரித்துச் செல்வீர்கள் வாகன வகையில் ஆதாயம் பெறுவீர்கள்.
துலாம்:
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நாளின் பிற்பகுதியில் அலைச்சல் அதிகமாகும். தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும். முயற்சிகள் வெற்றியடையும். வெளியூர் மற்றும் வெளி நாட்டில் வேலை தொடர்பான செய்தியை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
த
விருச்சிகம்:
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும்.
தனுசு:
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாகவே துவங்கும் சுபகாரிய பேச்சு வார்த்தைகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது வெற்றிக்கனியைப் பெறும் வழியை எளிதாக்கும் கணவன்-மனைவியரிடையே சிறு சிறு பிணக்குகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு என்பதால் வார்த்தையை அளந்து பேசுவது நல்லது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மகரம்:
நேயர்களுக்கு செய் தொழிலில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் சற்று கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை நாளை தள்ளி வைப்பது நல்லது.
கும்பம்:
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக எனக்கு கல்வி நன்றாக இருக்கும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
மீனம்:
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சமமாக இருந்து வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்
நாள் : பிலவ வருடம் பங்குனி மாதம் 28ம் தேதி திங்கட்கிழமை 11.4.2022
திதி : இன்று அதிகாலை 01.36 மணி வரை நவமி திதி பின்னர் தசமி .
நட்சத்திரம் : அதிகாலை 05. 15 மணி வரை பூசம் நட்சத்திரம் பின்னர் ஆயில்யம்.
நாமயோகம் : இன்று காலை 10 5 மணி வரை திருதி பின்னர் சூலம்
கரணம் : இன்று அதிகாலை காலை 01.36 மணிவரை கௌலவம். அதன்பிறகு பகல் 02.11 மணிவரை தைதுலம். பின்னர் கரசை..
அமிர்தாதி யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்
காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
பகல்: 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணிவரை
இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: மாலை 01.30 முதல் 03.00 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
நேத்திரம்: 2 – ஜீவன் 1/2