இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
துலாமில் கேது, மகரத்தில் சனி, கும்பத்தில் சுக்கிரன், செவ்வாய், குரு,, மீனத்தில் சூரியன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
இன்றைய ராசிபலன்:
மேஷம்:
நண்பர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேம்படும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் நல்ல நாளாகும்.
ரிஷபம்:
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஒரு சிலருக்கு இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகமாக ஏற்படும்.
மிதுனம்:
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்:
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு முன்னேற்றமான நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இணக்கமான சூழ்நிலையை காண்பார்கள். கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பதற்கான நாள் ஆகும்
சிம்மம்:
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான விஷயங்களை ஆரம்பிக்க இன்று சிறந்த நாள் ஆகும்.
கன்னி:
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். வியாபாரம் சேவைத் தொழில் பத்திரிகைத் தொழில் கலைத்துறை வாகன தொழில் அரசு நிர்வாகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும்.
துலாம்:
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சற்று காலதாமதம் ஆனாலும் நல்ல முடிவுகள் கிடைக்கும் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்றுவிடுவீர்கள். எதிர்கால வளர்ச்சிக்கு இது மிகுந்த உதவி செய்யக் கூடியதாக இருக்கும்.
விருச்சிகம்:
இன்றைய நாள் இனிய நாள் ஆகும் மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும் வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும் ஒரு சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பர் இவற்றில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
தனுசு:
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் பங்கு வர்த்தக துறை சுற்றுலாத்துறை உணவுத் துறை போன்றவற்றில் வேலைவாய்ப்பு பார்ப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஊதிய உயர்வு கிடைக்கும் ஒரு சிலருக்கு பிரயாணங்கள் வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கூடுமானவரைத் தவிர்க்கலாம்.
மகரம்:
உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கும் கமிஷன் ஏஜென்சி போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கும் இன்று வருமானம் நன்றாக இருக்கும். உடல்நலன் நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வந்து நீங்கும்
கும்பம்:
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும் எதிர்பார்த்த பணவரவு உண்டு குடும்பத்தில் அமைதி நிலவும் பிற்பகலில் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் புதிய நட்புகள் உருவாகும் உத்தியோகத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்.
மீனம்:
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் தன வரவு உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றி ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு என்பதால் தைரியமாக பிரயாணத்தை மேற்கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம்:
நாள் : பிலவ வருடம் பங்குனி மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 10.4.2022
திதி : இன்று அதிகாலை 12.0 1 மணி வரை அஷ்டமி திதி பின்னர் நவமி .
நட்சத்திரம் : அதிகாலை 03. 07 மணி வரை புனர்பூசம் நட்சத்திரம் பின்னர் பூசம்.
நாமயோகம் : இன்று காலை 09.56 மணி வரை சுகர்மம். பின்னர் திருதி.
கரணம் : இன்று அதிகாலை காலை 12.01 மணிவரை பவம். அதன்பிறகு பகல் 12.35 மணிவரை பாலவம். பின்னர் கௌலவம்.
அமிர்தாதி யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்
காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.00 மணி வரை
பகல்: 01.30 முதல் 02.30 மணிவரை
மாலை: 03.30 முதல் 04.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
நேத்திரம்: 1 – ஜீவன் 1/2