இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்
மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
நேயர்களுக்கு புதிய தொழில் முயற்சிகளை தவிர்த்துக்கொள்வது நல்லது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்துவிடும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த வேலைகளை இன்று வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள் எதிர்பார்த்த தன வரவு உண்டாக சற்று காலதாமதமாகும் என்றாலும் நன்மையே நடைபெறும்.
ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நண்பர்களுக்கு செய்யும் தொழிலை மேம்படுத்தும் நல்ல நாள் ஆகும் தொழில் முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றத்தை எதிர் நோக்கி இருந்தாள் அவைகளில் வெற்றி உண்டாகும் வீட்டிற்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்குவீர்கள்.
மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையானதொரு நாள் ஆகும் தன வரவு உண்டாகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடையக்கூடிய நல்ல நாள் ஆகும் கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும் காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான சந்திப்புகள் உண்டு மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும்.
கடகம் இன்றைய ராசிபலன் – Cance
நேயர்களுக்கு இன்றைய நாள் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வைக்கக்கூடிய நாள் ஆகும் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் புதிய கல்வி வாய்ப்புகள் அமையும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள் ஆகும்.
சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நேயர்களுக்கு இன்றைய நாள் சற்றே உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால் உங்கள் பேச்சில் நிதானம் தேவை உடல் உஷ்ணத்தினால் நோய்நொடிகள் அல்லது உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவே உண்ணும் உணவில் கவனம் தேவை.
கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் சொத்து வாங்குவது விற்பது தொடர்பானவற்றில் ஆதாயம் பெறுவீர்கள் மாணவர்களுக்கு கல்வித் திறன் நன்றாக உயரும் உயர் கல்வி கற்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தென்படக்கூடிய நாள் ஆகும் புதிய வேலை வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும் புதிய தொழில் முயற்சிகளை உள்ளவர்களுக்கு வாய்ப்புக்கள் உங்கள் வாயிலில் வந்து நிற்கும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் ஒருசிலர் புதிய மொபைல் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
நண்பர்களுக்கு அதிக அலைச்சல்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது இருந்து பணம் வருவதை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல செய்திகளும் நீங்கள் எதிர்பார்த்த தன வரவும் உண்டாகும் ஆயில் அண்ட் கேஸ் கட்டுமானத்துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு வேலைப்பாடு இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் உண்டு கணவன் மனைவி உறவு அந்நியோன்யமாக இருக்கும் நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு உண்டாகும் வேலையில் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான நாள் ஆகும்.
மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் மனதை வலுவாக ஆட்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகள் அதிக வேலைப்பளுவைக் கொடுக்கும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மை ஏற்படும்.
கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நண்பர்களுக்கு உணர்ச்சிவசப்படக்கூடிய என்பதால் சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் கோபத்தை குறைத்துக் கொள்ளவும் உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல் செலவினங்கள் உண்டாக வாய்ப்புண்டு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதம் ஆகும்.
இன்றைய பஞ்சாங்கம்:
பங்குனி 26 – தேதி 09.04.2022 – சனிக்கிழமை
வருடம் – ப்லவ வருடம்
அயனம் – உத்தராயணம்
ருது – சிசிர ருது
மாதம் -பங்குனி – மீன மாதம்
பக்ஷம் – சுக்ல பக்ஷம்
திதி – அஷ்டமி
நட்சத்திரம் – அதிகாலை 12.43 வரை திருவாதிரை, பின்பு புனர்பூசம்
யோகம் – சித்தயோகம்
கரணம் – காலை 11.05 வரை பத்ரம் , பின்பு பவம்,
சம நோக்கு நாள்.
நல்ல நேரம் – காலை 07.30 – 08.30 , மாலை 04.30 – 05.30
கௌரி நல்ல நேரம் – காலை 10.30 – 11.30 , மாலை 09.30 – 10.30
ராகுகாலம் -காலை 09.00 – 10.30 வரை
எமகண்டம் – பிற்பகல் 01.30 – 03.00 வரை
குளிகை – காலை 06.00 – 07.30 வரை
சூரிய உதயம் – 06.06 AM
சூரிய அஸ்தமனம் – 06.03 PM
சந்திராஷ்டமம் – கேட்டை
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்