ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் மாசி 26 ஆம் தேதி மார்ச் 10, 2022, வியாழக்கிழமை

திதி: அஷ்டமி மறுநாள் விடிகாலை 05.34 மணிவரை அதன் பின் நவமி

நட்சத்திரம்: ரோகிணி பகல் 11.30 மணி வரை அதன் பின் மிருகஷீரிடம்

யோகம்: ப்ரீதி நாமயோகம்

கரணம் : பத்தரை அதன் பின் பவம்

மரணயோகம்

நேத்திரம் 1 ஜீவன் 1/2

நல்ல நேரம்:

காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல் : 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை : 04-30 மணி முதல் 07-00 மணி வரை
இரவு: 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

இராகு காலம் : பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம் : காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை : காலை 9-00மணி முதல் 10-30 மணி வரை

இன்றைய ராசிபலன்

பிலவ வருடம் மாசி 26 ஆம் தேதி மார்ச் 10, 2022, வியாழக்கிழமை, அஷ்டமி மறுநாள் விடிகாலை 05.34 மணிவரை அதன் பின் நவமி. ரோகிணி பகல் 11.30 மணி வரை அதன் பின் மிருகஷீரிடம். சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்காத திடீர் மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு மறைமுக எதிரிகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் மற்றவர்களுக்கு கருத்து வேறுபாடு கொடுக்கலாம். தேவையற்ற விமர்சனங்கள் தவிர்த்து வெற்றி நடைபோடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண தடை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கேட்ட பணம் கைக்கு கிடைக்க காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இந்த பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டு. ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கடமையில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்லுதல் நலம் தரும். பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மறையாக சிந்திக்க கூடிய நாளாக இருக்கும். உங்களை பிடித்த தரித்திரங்கள் ஒழியும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களைத் தேடி வந்து இணைய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் சிக்கல்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு துணிவு இருக்கும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் சங்கடங்கள் மறையக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொலை தூர இடங்களிலிருந்து அதிர்ஷ்டம் வர காத்திருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் இணக்கம் தேவை. உங்கள் வேலையில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கின்றது. தொலை தூர இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வாகன ரீதியான வீண் விரயங்களை சந்திக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் விரும்பியதை அடைய கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். எடுக்கின்ற முடிவுகள் சுப முடிவாக இருக்கும். மூன்றாம் நபர்களை நம்பி ஜாமீன் கையெழுத்துப் போடுவதில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு குறைகளையும் உடனடியாக கவனிப்பது நல்லது.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்க பாருங்கள். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பண விஷயத்தில் கவனம் தேவை. முக்கிய முடிவுகளை எடுப்பதை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வழிகள் பிறக்கும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பதை நடத்திக் காட்டுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவி அன்பு மேலும் மெருகேறும். இளைய சகோதரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் உறுதியான முடிவுகளை எடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நன்மைகள் நடக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கும். இதுவரை அனுபவித்து வந்த துன்பத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு துணிவு தேவை.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்குவதை தவிர்ப்பது நல்லது. எத்தகைய இடையூறுகளையும் எதிர்த்து நின்று போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் சக போட்டியாளர்கள் மத்தியில் பெருமையாக உணரப்படுவீர்கள். பொருளாதார ஏற்றம் காணும் என்பதால் குடும்பத்தில் இருக்கும் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *