ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

இன்றைய ராசிபலன்:

மேஷம்
மேஷ ராசிக்கு இன்று நற்பலன் அதிகமாக கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்க திட்டமிடுவீர்கள். தொழில், வியாபாரிகளுக்கு லாபம் தரக்கூடிய நல்ல நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் சிறப்பான செயல்பாடுகளால் ஈர்க்கப்படுவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியினர் சிந்தனையும், செயலும் சீராக வைத்துக் கொள்ள வேண்டிய நாள். இன்று நீங்கள் ஆடை, ஆபரணங்கள் வாங்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய முயற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசிக்கு இன்று அதிர்ஷ்டத்தின் உதவி கிடைக்கும். சிலர் பெரிய சாதனைகளை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளது. உங்கள் மீதான பணிச்சுமை குறைய வாய்ப்புள்ளது. இதனால் மன இறுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். வணிகம், தொழில் செய்பவர்கள் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். அதன் மூலம் நல்ல பண வரவு, லாபம் கிடைக்கும்.

கடகம்
கடக ராசியினர் கடினமாக உழைத்து நன்மதிப்பு பெறக்கூடிய நாளாக இருக்கும். தொழில், வியாபாரம் மேம்படும். பழைய கால பிரச்சினைகளிலிருந்து மீண்டு வெற்றி அடைவீர்கள். சிக்கலான விஷயங்களை விரைவில் தீர்க்க முயல்வீர்கள். உங்கள் பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு அமையும். உங்கள் மனது, முகத்தில் மகிழ்ச்சி பிரதிபலிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு மனதில் நிம்மதி ஏற்படக்கூடிய நாள். தங்கள் குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய நாளாக இருக்கும். நிதி நிலையில் இருந்த சிக்கல்கள் தீர்க்க முடியும். ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியினருக்கு மகிழ்ச்சிகரமான நாள். உங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்பதால் மதிப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.குடும்ப விஷயங்கள், சொத்து பற்றிய விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளவும். பிறரிடம் கலந்து கொள்ள வேண்டாம்.

துலாம்
துலாம் ராசிக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷமம் இருப்பதால் உங்கள் செயல்களில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். இரும்பு, உலோகம் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். தினசரி வேலையில் சரியான திட்டமிடல் தேவை. தைரியத்தை இழக்காமல், கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளுங்கள். இன்று உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். பெறுவதை விட கொடுப்பது எப்போதும் நிறைவைத் தரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு பெரிய முடிவுகளை எடுக்கவும். வேலை தொடர்பான விஷயங்கள் சிறக்கும். சுறுசுறுப்புடன், உங்கள் ஒவ்வொரு பணியை செய்து மிக எளிதாக முடிப்பீர்கள். மாணவர்கள் தேர்வு-போட்டிகளில் வெற்றி பெறுவார்கள்.

தனுசு
இன்று இனிமையாக பேசுவது நல்லது. கடுமையான பேச்சுக்களைத் தவிர்ப்பதும், உணர்ச்சிவசப்படுவதையும் தவிர்க்கவும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. நிதி நிலை சற்று சங்கடங்களைத் தரும். பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடுமையாக உழைக்க வேண்டி வரும்.

மகரம்
உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் நிலுவை பணிகளை முடிக்க கவனம் செலுத்துங்கள். வேலை சிறக்க சாதகமான நாளாக இருக்கும்.

கும்பம்
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் செலவிட விரும்பிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலவச நேரத்தைப் பெறுவீர்கள். இது ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் முகத்திலும் புன்னகையை வரவழைக்கும். உங்கள் வீட்டு வேலை மற்றும் காதல் உறவை சமநிலைப்படுத்த முடியும். இரண்டும் உங்களுக்கு சமமாக முக்கியமானதாக இருக்கும்.

மீனம்
இன்று உணர்ச்சிகரமான நாளாக இருக்கும். சில ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவீர்கள். உங்களின் எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்திப்பீர்கள். காதலில் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலை இருக்கும். துணையுடன் விட்டுக் கொடுத்துச் செல்ல நெருக்கமான, அன்பான நாளாக இருக்கும்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : பிலவ வருடம் பங்குனி மாதம் 23ம் தேதி புதன்கிழமை.அஈஜரபச

திதி : பஞ்சமி மாலை 06.08 மணி வரை பின்னர் சஷ்டி.

நட்சத்திரம் : ரோகிணி இரவு 07:30 மணி வரை பின்னர் மிருகசீரிடம்

நாமயோகம் : ஆயுஷ்மான் காலை 07.50 மணி வரை பின்னர் சௌபாக்கியம்.

கரணம் : பவம் அதிகாலை 05.12 மணி வரை பின்னர் பாலவம் மாலை 06.08 மணி வரை பிறகு கௌலவம்.

அமிர்தாதி யோகம்: அமிர்தயோகம் காலை 06.08 மணி வரை பின்னர் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 09.00 முதல் 10.00 மணி வரை

பகல்: 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை: 04.30 முதல் 05.30 மணிவரை

மாலை: 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

குளிகை: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.

சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

நேத்திரம்: 1 – ஜீவன் 1/2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *