ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன்:

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் இன்றைய ராசிபலன்
இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன்

இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் உறவு நிலை நன்றாக இருக்கும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்நிலையை அடைவார்கள் மன நிம்மதி கிடைக்கும்.

Gemini மிதுனம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கிறது. பல முக்கிய முடிவுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிலையை அடைவார்கள்.

கடகம் இன்றைய ராசிபலன்

நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாள் ஆகும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். குடும்பத்தில் உள்ள இளையவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும். ஆடை ஆபரணச்சேர்க்கை சேர்வதற்கு வழி வகை உண்டு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

சிம்மம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைவரப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு சந்தோசமான பல பல நிகழ்வுகள் உண்டு

Virgo கன்னி இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்ததொரு நாளாகும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சிறிய அளவில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் நிதானமாக இருக்கவும்.

துலாம் இன்றைய ராசிபலன்
இன்று உங்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால், நண்பர்களுக்கு கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் நிதானம் தேவை. பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இனிமையான நிகழ்வுகளை கொடுக்கக்கூடிய நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் உள்ள மூத்தவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியில் முடியும் சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

தனுசு இன்றைய ராசிபலன்

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றிற்கான அடிப்படையான நாள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றால் நன்மையும் உண்டாகும்.

Capricorn மகரம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் உடல் நலம் நன்றாக இருந்து வரும் கணவன் மனைவி உறவு நிலை அன்னியோனியமாக இருக்கும் சமுதாயத்திலும் குடும்பத்திலும் உங்கள் பேச்சிற்கு மரியாதை உண்டாகும் மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும்.

Aquarius கும்பம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் அரசு தொடர்பான வேலைகள் எளிதாக முடிவடையும். வழக்கு சம்பந்தப்பட்ட காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் தேங்கியிருந்த பல வேலைகள் நல்லபடியாக முடியும்.

Pisces மீனம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும் ஆதாயம் பெறுவார்கள் பொருளாதாரத்தில் ஏற்றத்தைக் காண்பீர்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : பிலவ வருடம் பங்குனி மாதம் 22ம் தேதி ஏப்ரல் 05, 2022, செவ்வாய்க்கிழமை.

திதி : சதுர்த்தி மாலை 04:16 மணி வரை பின்னர் பஞ்சமி.

நட்சத்திரம் : கிருத்திகை மாலை 05.16 மணி வரை பின்னர் ரோகிணி.

நாமயோகம் : பிரீதி காலை 07.31 மணி வரை பின்னர் ஆயுஷ்மான்.

கரணம் : வணிசை அதிகாலை 03.29 மணி வரை பின்னர் பத்தரை மாலை 04.16 மணி வரை பிறகு பவம்.

அமிர்தாதி யோகம்: மரணயோகம் காலை 06.08 மணி வரை பின்னர் சித்தயோகம் மாலை 05.11 மணி வரை பிறகு அமிர்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 07.30 முதல் 08.30 மணி வரை

பகல்: 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 04.30 முதல் 05.30 மணிவரை

இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.

எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.

குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

ஜீவன்: 1/2 – நேத்திரம்: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *