ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன்:

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
இன்று இனிமையாக பேசுவது நல்லது. கடுமையான பேச்சுக்களைத் தவிர்ப்பதும், உணர்ச்சிவசப்படுவதையும் தவிர்க்கவும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. நிதி நிலை சற்று சங்கடங்களைத் தரும். பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடுமையாக உழைக்க வேண்டி வரும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் நிலுவை பணிகளை முடிக்க கவனம் செலுத்துங்கள். வேலை சிறக்க சாதகமான நாளாக இருக்கும்.

காதல் விஷயங்கள் நன்றாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான புரிதல் படிப்படியாக மேம்படும். உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.
தொழில், வியாபாரம் சார்ந்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவி தேவைப்படும்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நேயர்களே எடுக்கும் முயற்சியில் ஏற்றம் மிகுந்த பலன்கள் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். அதனால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நேயர்களே எதிலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக லாபகரமான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக ஒரு சில அனுகூலங்களை அடைவீர்கள். பயணங்கள் மூலமாக சாதகமான பலன்களை அடைவீர்கள்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
சிம்ம ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் இருக்கிறது. பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. முடிந்தவரை புதிய ஒப்பந்தங்கள், முதலீடுகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கவும். முன்னர் செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நேயர்களே உங்களுடைய வளமும், வலிமையும் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலமாக ஒரு சில நல்ல பலன்களை அடைவீர்கள். தொழில் ரீதியாக படிப்படியான முன்னேற்றம் அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் செலவிட விரும்பிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலவச நேரத்தைப் பெறுவீர்கள். இது ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் முகத்திலும் புன்னகையை வரவழைக்கும். உங்கள் வீட்டு வேலை மற்றும் காதல் உறவை சமநிலைப்படுத்த முடியும். இரண்டும் உங்களுக்கு சமமாக முக்கியமானதாக இருக்கும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
இன்று உணர்ச்சிகரமான நாளாக இருக்கும். சில ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவீர்கள். உங்களின் எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்திப்பீர்கள். காதலில் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலை இருக்கும். துணையுடன் விட்டுக் கொடுத்துச் செல்ல நெருக்கமான, அன்பான நாளாக இருக்கும்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நேயர்களே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணவரவுகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றக் கூடிய சிறப்பான நாளாக இருக்கும். தொழில்ரீதியாக லாபகரமான பலன் ஏற்படும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நேயர்களே உங்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று தாமதமாகும். பேச்சில் சற்று பொறுமையுடன் இருப்பது உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக பார்க்கும்போது வேலையாட்களைச் சற்று அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நேயர்களே உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று தாமதமாக கூடிய நாளாக இருக்கும். கோபத்தைச் சற்று குறைத்துக் கொள்ளவும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரணை அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய அதிக முயற்சி தேவைப்படும்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நேயர்களே உங்களுக்கு பல்வேறு வகையில் அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி விடுவீர்கள். தொழில்ரீதியாக ஒரு வளமான பலனடைவீர்கள். நண்பர்கள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சியில் ஏற்றம் மிகுந்த பலனை பெறுவீர்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

நாள்: பிலவ வருடம் பங்குனி 18 ஆம் தேதி ஏப்ரல் 01, 2022, வெள்ளிக்கிழமை

திதி: அமாவாசை பகல் 11.54 மணி வரை அதன் பின் பிரதமை திதி

நட்சத்திரம்: உத்திரட்டாதி பகல் 10.40 மணி வரை அதன் பின் ரேவதி

யோகம்: பிராமியம் நாமயோகம்

கரணம் : நாகவம் அதன் பின் கிம்ஸ்துக்னம்

சித்த யோகம் நாள் முழுவதும்

நேத்திரம் 0 ஜீவன் 0

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை

பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை

மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை

இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை

எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை

குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

சூலம் – மேற்கு

சூலம் பரிகாரம் – வெல்லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *