ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம்
மேஷ ராசிக்கு மிகவும் சிறப்பான பலன் தரக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எடுத்த இலக்கு, வேலைகள் சிறப்பாக நிறைவேறும்.
நீங்கள் ஈடுபட்டிருக்கும் தொழில், வியாபாரம், உத்தியோகம் என எதுவாக இருந்தாலும் அதில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தம்பதியிடையே நல்ல அன்பும், நெருக்கமும் இருக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம், தன வரவு பல்வேறு வழிகளில் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசியினரின் கனவு, விருப்பங்கள் நிறைவேறக்கூடிய நாளாக அமையும். உங்கள் மனதில் நம்பிக்கை அதிகரிப்பதோடு, தைரியமாக எதையும் செய்வீர்கள்.தொழில், உத்தியோகம் என எப்பேர்ப்பட்ட சூழலாக இருந்தாலும் அத்ஹு சாதகமாக இருப்பதோடு, அதில் வளர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் நன்றாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

மிதுனம்
மிதுன ராசி கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாளக இருக்கும். எளிதாக முடிக்க வேண்டிய வேலைகளை முடிக்க போராட வேண்டியிருக்கும். குறிப்பாக தொழில், உத்தியோகத்தில் நினைத்த இலக்கை அடைய சிரமமும், பணிச்சுமையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்:

கடக ராசிக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. எதையும் எளிதாக நினைத்து இறங்க வேண்டாம். பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களும், அலைச்சலும் அதிகரிக்கலாம்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனம் தேவை. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டு இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம் இருப்பினும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
அன்பர்களுக்கு இன்றைய நாட்டு மிகச்சிறந்த நாள் உத்தியோகத்திலிருப்பவர்கள் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம் அதற்கான அடித்தளங்கள் இன்று அமையும் பெண்களுக்கு நன்மை தரக்கூடிய நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை பொருளாதாரத்தில் பற்றாக்குறைகளை விரைவில் சரி செய்து விடுவீர்கள் கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி உறவு சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் இறுதியில் ஒற்றுமை நன்றாக இருந்து வரும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனைகளை ஏற்படும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் இடத்தில் ஏற்படுவதற்கான நாள் ஆகும் அது தொடர்பான காரியங்களை இன்று துவக்கலாம்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும் குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் சற்று அனுசரித்துச் செல்ல வேண்டும் பொருளாதாரத்தில் ஓரளவுக்கு பற்றாக்குறை இருந்தாலும் எளிதில் சரி செய்து விடுவீர்கள்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு ஒரு சில நாட்கள் கால தாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமண காரியங்கள் கைகூடும்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisce
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் நன்மை உண்டாகும் பொருளாதாரத்தில் பற்றாக்குறை சற்றுக் இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும்.

நாள்: பிலவ வருடம் பங்குனி 16 ஆம் தேதி மார்ச் 30, 2022, புதன்கிழமை

திதி: திரயோதசி பகல் 01.19 மணி வரை அதன் பின் சதுர்த்தசி திதி

நட்சத்திரம்: சதயம் பகல் 10.48 மணி வரை அதன் பின் பூரட்டாதி

யோகம்: சுபம் நாமயோகம்

கரணம் : வணிசை அதன் பின் பத்தரை

சித்த யோகம் பகல் 10.48 மணி வரை அதன் பின் அமிர்தயோகம்

நேத்திரம் 0 ஜீவன் 1/2

நல்ல நேரம்:

காலை: 09-00 மணி முதல் 10-00 மணி வரை

பகல் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை

மாலை : 04-00 மணி முதல் 05-00 மணி வரை

இரவு: 07-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

இராகு காலம் : பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

எமகண்டம் : காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

குளிகை : காலை 10.30 மணி முதல் 12-00 மணி வரை

சூலம் : வடக்கு

சூலம் பரிகரம் : பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *