ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் மாசி 11 ஆம் தேதி பிப்ரவரி 23, 2022, புதன்கிழமை

திதி: சப்தமி மாலை 04.57 மணிவரை அதன் பின் அஷ்டமி

நட்சத்திரம்: விசாகம் பகல் 02.40 மணி வரை அதன் பின் அனுஷம்

யோகம்: ஹர்சனம் நாமயோகம்

கரணம் : பத்தரை அதன் பின் பவம் அதன் பின் பாலவம்

சித்த யோகம் நாள் முழுவதும்

நேத்திரம் 2, ஜீவன் 1/2

நல்ல நேரம்:

காலை: 09-00 மணி முதல் 10-00 மணி வரை

பகல் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை

மாலை : 04-00 மணி முதல் 05-00 மணி வரை

இரவு: 07-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

இராகு காலம் : பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

எமகண்டம் : காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

குளிகை : காலை 10.30 மணி முதல் 12-00 மணி வரை

சூலம் : வடக்கு

சூலம் பரிகரம் : பால்

இன்றைய ராசிபலன்:

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால், சற்று விரக்தியான மன நிலையுடன் காணப்படுவீர்கள். மனதை சாந்தமாக, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம். பணியில் கூடுதல் பொறுப்பு இருக்கும். பணி இட சூழலும் திருப்தியாக இருக்காது. துணையுடன் மோதல் போக்கு இருந்தாலும், குடும்பத்தில் திடீர் மகிழ்ச்சி ஏற்படும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
இன்றைய நாள் சற்று சுமாரான நாளாக காணப்படும். திறம்பட உங்கள் செயல்களை ஆற்ற வேண்டிய நாள். தியானம் மேற்கொள்வது நல்லது. இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். சிறந்த வாய்ப்புகள் பெறுவீர்கள்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
வளர்ச்சி காணப்படக்கூடிய நாள். சுப காரிய முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின் வெற்றி அடையும். பணிச்சுமை இருக்கும். இருப்பினும் திறமையாக உழைக்க அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நல்லுறவு இருக்கும். உங்களின் செயல்பாடு பிரியமானவர்களைக் கவர்ந்து இழுக்கும்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer

பண வரவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு பயணங்கள் ஏற்படலாம். பணி இட மாற்றம் உண்டாகலாம். சற்று பணிச்சுமை இருக்கக் கூடிய நாள். துணிச்சலுடன் காரிங்களை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் சிறக்கும்.புதிய நபர்களுடன் சற்று கவனம் தேவை. காதலுக்கான சிறந்த நாள்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
உங்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படலாம். உங்களின் ஆக்கப்பூர்வ செயல்களை அதிகரிக்கப் பதட்டத்தை கைவிடுங்கள். உங்கள் இலக்கை அடைய முறையான திட்டமிடல் அவசியம்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
உங்கள் திட்டமிட்ட பணியை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். மனதிலிருக்கும் குழப்பம் நீங்கும். எடுக்கும் முடிவை திட்டமிட்டு செயல்படுத்துவதால் நன்மை உண்டாகும். உங்கள் செயலுக்கான பாராட்டு கிடைக்கும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
உங்கள் திறமையை வெளிப்படுத்தி செயல்களை செய்து முடிப்பீர்கள். செயல்களை செய்து முடிக்கும் மனத்தெளிவு இருக்கும். சக பணியாளர்களுடன் நல்லுறவு இருக்கும். அவர்களால் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். அதனால் உங்களுக்கு வளர்ச்சி ஏற்படும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். பழைய திட்டங்களைக் கைவிட்டு புதிதாக முயல்வது நல்லது. நாள் இறுதியில் சாதகமற்ற சூழலை சமாளித்து அதை சாதகமாக்குவீர்கள்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
செயல்களில் பெரிய ஈடுபாடு இருக்காது. சோம்பலை விலக்கினால் நன்மை உண்டு. அதிர்ஷ்டத்தை நம்பாமல் செயலாற்றுவது நல்லது.

பணியில் திருப்தி ஏற்படும். சக பணியாளர்களால் நன்மையும், நல்லுறவும் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்தால் அவசியம். காதலுக்கு ஏற்ற நாள் இல்லை. உங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த முடியாத நிலை இருக்கும். பொறுமை இழக்காதீர்கள்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
இன்று உங்களுக்கான சிறப்பான நாள். உற்சாகம், தன்னம்பிக்கையுடன் கூடிய நாள். உங்கள் பணியில் நல்ல வெற்றி கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும், உறவு, நண்பர்களிடம் நல்லிணக்கம் இருக்கும். உங்கள் துணையின் உணர்வை புரிந்து கொள்வீர்கள்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
முதலில் செய்ய வேண்டிய செயல்கள் என வரிசைப்படுத்திக் கொள்ள வேலை வேகமாக முடியும். செய்வதற்கு மனதில் தெளிவு கொள்ளுங்கள். விழிப்புணர்வுடன் செயல்பட வளர்ச்சி காண்பீர்கள். பணியில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் பணிகளை விரைந்து செய்வீர்கள்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால், சில அசெளகரியங்கள் காணப்பட்டும். புதிய நண்பர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன் மனைவி அன்பு பெருகும். சகோதரர்களின் மூலம் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் துணிச்சலுடன் செயல்களை செய்து முடிப்பீர்கள். உங்களின் நேர்மை பாராட்டைப் பெற்றுத்தரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *