ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன்:

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
இன்று பேச்சிலும், செயலிலும் சற்று நிதானமாக செயல்பட நல்ல பலனைப் பெறலாம். பண வரவு சிறப்பாக இருக்கும் என்பதால் உங்கள் பிரச்னைகள் குறையும் என்றாலும், உடன் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும் என்ற நிலை உள்ளதால் எந்த செயலிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
உங்களுக்கு அலைச்சல்கள் இருந்தாலும், அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பண வரவுகள் சாதகமாக இருப்பதால் உங்களின் தேவைகள் நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சிலும், செயலிலும் சற்று பொறுமையாக இருப்பது நல்லது. குறிப்பாக முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
பேச்சி சற்று பொறுமையாக இருப்பது மிக மிக அவசியம். பணவரவு சிறப்பாக இருக்கும் என்றாலும், வரவுக்கு மீறிய செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்குத் தேவையற்ற பயணங்கள் ஏற்படலாம். சக நண்பர்களைச் சற்று அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
இன்று முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. பணவரவில் சாதகமாக இருந்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள் என்றாலும், எளிதில் முடியக்கூடிய வேலைகள் சற்று தாமதமாக வாய்ப்புள்ளது.

சிம்மம் இன்றைய ராசிபலன் -Leo
நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகள் ஒரு வளமான பலன்களை அடைவீர்கள். உடன் இருப்பவர்கள் சாதகமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஒரு அனுகூலமான பலனை அடைவீர்கள். கடந்த காலங்களில் நிலவிய தடைகள் விலகி, ஏற்றம் மிகுந்த பலன்களை இன்றைய நாளில் பெறுவீர்கள்

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo

உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோசமும் கிடைக்கும். தொழிலில் ஒரு வளமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருபப்வர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைப்பதால் சிறப்பான பலன் கிடைக்கும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய வேலைகள் கூட சற்று இழுத்தடிக்கும், கால தாமதம் ஏற்படும். எந்த செயலை செய்வதாக இருந்தாலும் சற்று சிந்தித்து, நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக தேவையற்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக மேன்மை அடையக்கூடிய நில இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு இருப்பதால் மேன்மையான பலன்கள் உண்டாகும். பணிச்சுமை குறைந்து மன நிம்மதி தரும்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
இன்றைய நாள் இனிய நாளாக அமையும். மதிப்பும், மரியாதையும் கூடும் நாள். உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதாக காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக ஒரு வளமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவும், புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
எல்லா வகையிலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். கடந்த கால சோதனைகள் விலகி ஒரு வளமான பலன்க் கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்னைகள் விலகி எதிலும் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius

உஙக்ளுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணப்பற்றாக்குறை இருந்தாலும், அதை எதிர் கொள்ளக்கூடிய தன வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பது நல்லது. உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
உங்களுக்கு நிலவிய சங்கடங்கள் விலகி நிம்மதி ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக முன்னேற்றம் இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக நெருக்கடிகள் விலகி நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சில நாட்களாக இருந்த இடையூறுகளும், பணிச்சுமையும் குறையும்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் பங்குனி 15 ஆம் தேதி மார்ச் 28, 2022, செவ்வாய்க்கிழமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *