ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் பங்குனி 13 ஆம் தேதி மார்ச் 27, 2022, ஞாயிற்றுக்கிழமை

திதி: தசமி மாலை 06.04 மணி வரை அதன் பின் ஏகாதசி திதி

நட்சத்திரம்: உத்தராடம் பகல் 01.32 மணி வரை அதன் பின் திருவோணம்

யோகம்: சிவம் நாமயோகம்

கரணம் : வணிசை அதன் பின் பத்தரை

அமிர்தயோகம் நாள் முழுவதும்

நேத்திரம் 1 ஜீவன் 1/2

நல்ல நேரம்:

காலை 07-30 மணி முதல் 10-00 மணி வரை
பகல் 02-00 மணி முதல் 04-30 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 12-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
எமகண்டம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
குளிகை மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை

சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்

இன்றைய ராசிபலன்:

மேஷத்தில் ராகு, துலாமில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், சந்திரன், கும்பத்தில் குரு, மீனத்தில் சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
நிதானத்துடன் செயல்படுவது நல்லது எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் சற்று தடைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களே உங்களுக்கு நெருக்கடியை உண்டாகலாம் தொழில் ரீதியாக பார்க்கும்போது வேலையாட்களைச் சற்று அனுசரித்துச் செல்வது நல்லது அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைச் சிறிது காலம் தள்ளிவைப்பது நல்லது.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
உங்களுக்கு இரண்டு பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து நிம்மதி ஏற்படும் பண வரவுகள் தாராளமாக கிடைக்கும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். கடந்தகால சிக்கல்கள் எல்லாம் விலகி குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்பட கூடிய நாடாக இருக்கும். தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று காலதாமதமாக வாய்ப்புள்ளது. இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
எடுக்கும் முயற்சிகள் அனுகூலமான பலன்கள் ஏற்படும் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். வேலைக்கு செல்பவர்கள் நல்லதொரு அதிர்ஷ்டமான பலன்களை பெறுவீர்கள்

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நேயர்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உங்களுக்கு இந்த பிரச்சினைகள் எல்லாம் நீங்கி நன்மை ஏற்படும். பொருளாதாரம் உயரும் என்பதால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி ஆகக்கூடிய நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவைத் தக்க சமயத்தில் கிடைக்கும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய நாளாகும் நண்பர்கள் மூலம் சில அனுபவங்களும் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நிம்மதியாக இருக்கும். வியாபார ரீதியாகப் பார்க்கும் போது பல்வேறு மேன்மையை அடைய கூடிய வாய்ப்புகள் உள்ளது.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
தங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் நண்பர்கள் மூலமாக ஒரு சில அனுபவங்கள் அடைவீர்கள். தொழில் ரீதியாக லாபங்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
நேயர்களே இன்று எதிலும் சற்று எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள் ஆகும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களின் அமைதியைக் கொடுப்பார்கள் தொழில் ரீதியாக பார்க்கும்போது வேலையாட்களை அனுசரித்துச் செல்லக்கூடியதாக இருக்கும். கூட்டாளிகளைச் சற்று அனுசரித்துச் செல்வதால் எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
உங்களின் பலமும் வலிமையும் கூட கூடிய நாளாக இருக்கும் கடந்தகால சோதனைகளை எல்லாம் முழுமையாக மறைந்து ஒரு வளமான பலனை பெறலாம். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் தொழிலில் லாபகரமான பலனை அடையலாம். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நேயர்களே எடுக்கும் முயற்சியில் ஒரு வளமான பலன்களை அடைய கூடிய நாள். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக காப்பாற்றுவீர்கள். தொழிலில் லாபகரமான பலனை அடைவீர்கள்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நேயர்களே எதிலும் சற்று நிதானமாக செயல்பட்டால் முன்னேற்றமான பலன்களை நிச்சயம் கிடைக்கும். பேச்சில் சற்று பொறுமையுடன் இருப்பதும் அவசியம். உடனிருப்பவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடியைத் தரக்கூடும். தொழில் ரீதியாக பார்க்கும்போது சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் அடையக்கூடிய லாபம் நீங்கள் அடைய கூறுவீர்கள். வேலைக்குச் செல்பவர்கள் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *