இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
இன்றைய பஞ்சாங்கம்:
நாள்: பிலவ வருடம் பங்குனி 12 ஆம் தேதி மார்ச் 26, 2022, சனிக்கிழமை
திதி: நவமி இரவு 08.02 மணி வரை அதன் பின் தசமி திதி
நட்சத்திரம்: பூராடம் பகல் 02.47 மணி வரை அதன் பின் உத்தராடம்
யோகம்: பரிகம்
கரணம் : தைதூலை அதன் பின் கரசை
சித்தயோகம் நாள் முழுவதும்
நேத்திரம் 1 ஜீவன் 1/2
நல்ல நேரம்:
காலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை
பகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
குளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை

இன்றைய ராசிபலன்:
மேஷத்தில் ராகு, துலாமில் கேது, தனுசுவில் சந்திரன், மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, மீனத்தில் சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
உங்களுக்கு சகல விதத்திலும் மேன்மையான பலன்களை பெறலாம். எடுக்கும் முயற்சியில் வளமான பலன்களை பெறலாம். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலமாக அற்புதமான பலன்களை பெறலாம். தொழில் ரீதியாக இருந்த தயக்கங்கள் எல்லாம் நீங்கி லாபகரமான பலன்கள் பெறலாம்.
ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நேயர்கள் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. எடுக்கும் முயற்சியில் தேவையற்ற தடை தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யக்கூடிய செயல்கள் கூட தவறாக முடிய வாய்ப்புள்ளது. பொதுவாக குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அவசியம்.
மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நேயர்களே பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். இருப்பதை அனுபவிப்பதற்கு கூட இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வியாபார நிலை சாதகமாக இருந்தாலும் வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது அவசியம்.
கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நேயர்களே உங்களுடைய நலமும் வளமும் கூட கூடிய நாள் இன்று. நினைத்தது நடக்கும் பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் நீங்கும். இருக்குமிடத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நேயர்களே உங்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய சிறப்பான சூழல் இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். பேச்சில் சற்று பொறுமையாக இருப்பது அவசியம்.
கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நேயர்களே எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களை பெறலாம். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றக் கூடிய சூழலில் இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும் என்பதால் கடந்த கால பிரச்சனைகள் எல்லாம் நீக்கி நற்பெயர் ஏற்படும். இருக்கும் இடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். ஒரு பெரிய மனிதர்களின் ஆதரவு கூட உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நேயர்களே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். கனவுகள் எல்லாம் சிறப்பாக நிறைவேறும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். தொழில்ரீதியாக லாபகரமான பலன்களை பெறுவீர்கள். நண்பர்கள் மூலமாக ஒரு சில அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக நிறைவு நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவீர்கள்.
விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
நேயர்களே நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் வளமான பலன்களைப் பெறலாம். பணவரவுகள் சாதகமாக இருக்கும் உங்களுடைய தேவைகளை நிறைவேற்றக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும்.
தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நேயர்களே எடுக்கும் முயற்சியில் தேவையற்ற தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பதை அனுபவிப்பதற்கு கூட இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவுகள் சாதகமாக இருக்கும். அதனால் உங்களின் நெருக்கடிகள் சற்று குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். தொழில் வியாபாரத்தில் சிறப்பான சிறப்பாக இருக்காது. எந்த ஒரு செயலையும் நீங்களே முன்னின்று செயல்பட வேண்டிய நிலை இருக்கும்
மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நேயர்களே எந்த முயற்சி எடுத்தாலும் சாதகமான பலன்களை பெறக்கூடிய நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் மூலமாக ஒரு சில அனுபவங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும்.
கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நேயர்களே கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இந்த மனம் மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் நீங்க கூடிய நாளாக இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நேயர்களே உங்களுடைய பலமும் வலிமையும் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றியது இலாபகரமான பலன்களை பெறுவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும் என்பதால் கடந்த கால கடன் பிரச்சனைகள் எல்லாம் நீங்கி மனநிம்மதி ஏற்படும்.