ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன்:

மேஷத்தில் ராகு, தனுசு ராசியில் சந்திரன், துலாமில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, மீனத்தில் சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி உறவு மாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தாமதம் ஆகலாம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு அவைகளில் வெற்றி அடைவீர்கள் தொழில் துவங்க பலருக்கு மனதில் எண்ணம் ஏற்படும் இவற்றில் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நண்பர்களுக்கு இன்றைய நாள் ஆகும் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது உத்தியோகங்களுக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது இருப்பினும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் வெற்றி அடைவார்கள்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாக அமையும் எதிர்பார்த்திருந்த பல காரியங்கள் வெற்றியடையும் தன வரவு உண்டாகும் கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் நிற்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் அவைகளில் வெற்றி பெறுவீர்கள்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும் நீங்கள் எதிர்பார்த்த பல காரியங்களில் வெற்றி கிடைக்கும் தன வரவுக்கு வழி உண்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள் இன்று நீங்கள் செய்யக்கூடிய பல காரியங்கள் உங்கள் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு இருக்கும் அடித்தளமாக அமையும்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாகும் நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் நீண்டகாலமாக தொழிலில் இருந்து வந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் புதிதாக தொழில் துவங்க எண்ணங்கள் உருவாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் நீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்ப எண்ணமும் செயல்பாடுகளும் கொண்டிருப்பீர்கள் இவற்றில் முன்னேற்றம் உண்டாகும் விசா தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும் இம்மாதிரியான காரியங்களை இன்று துவக்கம் மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் நீங்கள் எதிர்பார்த்த பல காரியங்கள் வெற்றியடையும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும் பிரிந்து சென்று கொண்டிருந்த குடும்பங்கள் ஒற்றுமை அடைவார்கள் கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும் பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள் பார்த்த தனவரவு உண்டாகும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
உங்களுக்கு எல்லா வகையிலும் ஏற்றம் நடக்கும் நாளாகும். குடும்பத்தில் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கோபத்தை விடுத்து, பேச்சைக் குறைத்துக் கொள்வது நிதானமாக இருப்பது நல்லது. தொழிலில் லாபகரமான நிலையை அடைவீர்கள். வேலைவாய்ப்பில் நல்ல சாதகமாக அமையும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் உத்தியோகம் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரலாம் ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடி வரும் பிரயாணங்களால் ஆதாயம் உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள் உங்கள் திறமைக்கு சரியான மதிப்பு கிடைக்கும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
உங்களுக்கு பல்வேறு வகையில் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும் என்றாலும் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். பண வரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் கல்வியில் முன்னேற்றத்தை பெறுவீர்கள் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உண்டு விரும்பும் கல்லூரிகளிலும் படிப்புகளிலும் இடம் கிடைக்கும் கல்வி வாய்ப்புகள் உங்கள் கண்முன் நிற்கும்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாள் ஆகும் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மனதில் அதிகமாக ஓடும் சொத்துக்கள் வாங்குவது அல்லது வீடு கட்டுவது போன்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் ஈடுபடுவீர்கள் இவற்றில் வெற்றி கிடைக்கும் உத்தியோகம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்றுக்கொள்வீர்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் பங்குனி 11ஆம் தேதி மார்ச் 25, 2022, வெள்ளிக்கிழமை

திதி: அஷ்டமி இரவு 10.04 மணி வரை அதன் பின் நவமி திதி

நட்சத்திரம்: மூலம் மாலை 04.07 மணி வரை அதன் பின் பூராடம்

யோகம்: வரியான்

கரணம் : பாலவம் அதன் பின் கௌலவம்

அமிர்த யோகம் மாலை 04.07 அதன் பின் பிரபாலரிஷ்ட யோகம்

நேத்திரம் 2 ஜீவன் 1/2

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

சூலம் – மேற்கு

சூலம் பரிகாரம் – வெல்லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *