ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

மேஷத்தில் ராகு, விருச்சிகத்தில் சந்திரன், துலாமில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, சூரியன், மீனத்தில் புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
நேயர்களுக்கு புதிய தொழில் முயற்சிகளை தவிர்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்துவிடும். பேச்சில் நிதானம் தேவை வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். புதிய வேலை வாய்ப்பு தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
தன வரவு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை மென்பொருள் துறை அரசுத் துறைகளில் வேலையில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடையக்கூடிய நல்ல நாள் ஆகும். காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான சந்திப்புகள் உண்டு.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
கூட்டுத் தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கும் சற்றே பிரச்சனையான நாள் ஆகும். எனவே முடிவு எடுப்பது என்பதை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூடுமானவரை அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும்

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான பிரச்சனைகளில் சற்று இழுபறி நிலை ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உகந்த காலம் ஆகும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நண்பர்களுக்கு செய்யும் தொழிலை மேம்படுத்தும் நல்ல நாள் ஆகும். தொழில் முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவு செய்ய கிடைக்கும். இதனால் கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் உண்டு. வேலையில் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான நாள் ஆகும். காதல் தொடர்பான விஷயங்களை பெற்றோருடன் பேசுவதற்கு உகந்த நாளாகும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
புதிய தொழில் முயற்சிகள் அதிக வேலைப்பளுவைக் கொடுக்கும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் மனதை வலுவாக ஆட்கொள்ளும். வழக்கு போன்றவற்றில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசு தொடர்பான காரியங்களில் நன்மைகள் உண்டாகும்.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
சொத்து வாங்குவது விற்பது தொடர்பானவற்றில் ஆதாயம் பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் கணக்குத் துறை மருத்துவத்துறை போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலை தொழில் சற்று கூடுதலாக இருந்தாலும் திறனுடன் சமாளித்து வெற்றி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வித் திறன் நன்றாக உயரும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நேயர்களுக்கு இன்றைய நாள் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையக்கூடிய நாள் ஆகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய் நாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வர வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஆதாயமும் உண்டாகும் இனிய நாள் ஆகும்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நண்பர்களுக்கு இன்றைய உணர்ச்சிவசப்படக்கூடிய என்பதால் சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் கோபத்தை குறைத்துக் கொள்ளவும். உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல் செலவினங்கள் உண்டாக வாய்ப்புண்டு.

பாடல் விளக்கம்;

நாள்: பிலவ வருடம் பங்குனி 8ஆம் தேதி மார்ச் 22, 2022, செவ்வாய்கிழமை

திதி: சதுர்த்தி காலை 06.24 மணி வரை அதன் பின் பஞ்சமி திதி

நட்சத்திரம்: விசாகம் இரவு 08.13 மணி வரை அதன் பின் அனுஷம்

யோகம்: ஹர்சனம் நாமயோகம்

கரணம் : பாலவம் அதன் பின் கௌலவம்

மரணயோகம் இரவு 08.13 மணிவரை அதன் பின் சித்தயோகம்

நேத்திரம் 2 ஜீவன் 1

சூலம் – மேற்கு
பரிகாரம் – வெல்லம்

நல்ல நேரம்:

காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை

ராகு, எமகண்டம், குளிகை

ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
எமகண்டம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
குளிகை பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *