ஆன்மிகம்ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கமும் இராசிபலனும்

நம்பிக்கையோடு நீ உன் கடமையைச் செய்!உனக்கான அந்த நல்ல நாள் நிச்சயமாக ஒரு நாள் உன்னை தேடி வரும்……

ஷீரடி சாய்பாபாவை வணங்கும் இன்றைய தினம் உங்களுக்கான ராசிபலங்களை பார்ப்போம்!! பாபாவின் துணையோடு இன்றைய நாளை ஆரம்பிப்போம்….

இன்றைய  பஞ்சாங்கம்

30.09.2021* புரட்டாசி 14*வியாழக்கிழமை* நவமி திதி இரவு 10.09 வரை பின்பு தேய்பிறைதசமி.

நட்சத்திரம்

புனர்பூசம் இரவு 01.33 வரைபின்பு பூசம்.

யோகம்

அமிர்தம் இரவு 01.33 வரைபின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம் – காலை 06.00-07.30,

குளிகன் – காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் –  30.09.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாகஇருக்கும். உறவினர்கள் வருகையால்மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் உள்ளவர்களுடன்இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன்உண்டாகும். விட்டு கொடுத்து செல்வதன்மூலம் தேவையில்லாத பிரச்சினைகளைதவிர்க்கலாம். .

மிதுனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம்கூடும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் சுறுசுறுப்புடன்செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியானபயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்துஉதவுவார்கள்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியானநிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணமுயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வேலையில் இருந்த போட்டிபொறாமைகள் விலகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் எதிர்பாராத வீண்பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில்செலவுகள் அதிகமாகும். சிக்கனத்தை கடைப்பிடிப்பதுநல்லது.

துலாம்

உங்களின் ராசிக்கு தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும்முயற்சிகள் வெற்றியை தரும். ஆடம்பரபொருட்கள் வாங்குவதில் ஆர்வம்அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம்கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு  சந்திராஷ்டமம் இருப்பதால்எளிதில் முடிய வேண்டியகாரியம் கூட காலதாமதமாகும். உடல்ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர்பயணங்களையும், புதிய முயற்சிகளையும்தவிர்க்கவும்.

தனுசு

உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியம்நினைத்தபடி நிறைவேறும். வேலையில் உங்கள்திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகஇருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராதவகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரவளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில்எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகஇருக்கும். உத்தியோக ரீதியான வெளியூர்பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துசெல்வது நல்லது.

மீனம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் வீண் விரயங்கள்உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின்நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் வேற்று மொழி நபர்களால்பொருளாதார ரீதியான பிரச்சினைகள்நீங்கும்.

இன்றைய சிந்தனை துளிகள்

மனம் மலர்ந்தால் முகம் மலரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *