ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சோமவார பஞ்சாங்கமும் ராசிபலனும்

இன்றைய தினம் எப்படி இருக்க போது அப்படிங்கிற கவலையே வேண்டாம்… இதோ உங்களுக்காக உங்களின் ராசிக்கான பலன்கள்… இன்றைய தினம் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்…

இன்றைய  பஞ்சாங்கம்

18.10.2021** ஐப்பசி 01**திங்கட்கிழமை**திரியோதசி திதி மாலை 06.08 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.

 நட்சத்திரம்பூரட்டாதி  பகல் 10.49 வரை பின்பு உத்திரட்டாதி.

 யோகம்மரணயோகம் பகல் 10.49 வரை பின்பு சித்தயோகம்.

 நேத்திரம் – 2.

 ஜீவன் – 1.

 பிரதோஷம்.

 சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம்–  காலை 07.30 -09.00,

 எம கண்டம்- 10.30 – 12.00,

 குளிகன்– மதியம் 01.30-03.00,

 சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் –  18.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு தொழிலில் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம்.நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு நீங்கள் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பணப்பிரச்சினை நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கன்னி

உங்களின் ராசிக்கு உங்களுக்கு மனஅமைதி இருக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையில் சிலருக்கு திறமைகேற்ற பதவி உயர்வு கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை வராத பழைய கடன்கள் இன்று வசூலாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு

உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் ஏற்படலாம். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.

மகரம்

உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் வந்து சேரும். நவீனகரமான பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் நல்ல லாபம் கிட்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்கள் பாதியிலேயே தடைபடலாம். நெருங்கியவர்களால் மனசங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களால் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வேலையில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.

மேலும் படிக்க : லட்சுமி அருள் நிறைய லட்சுமி குபேர பூஜை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *