ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கமும் ராசி பலனும்

புரட்டாசி கடைசி தினமான இன்று பெருமாள் மற்றும் குருபகவானே வழிபட்டு அவர்களின் அருளாசியை பெறுங்கள். இன்றைய தினம் இனிய நாளாக அமைய, நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வாழ்த்துக்கள்..

இன்றைய  பஞ்சாங்கம்

17.10.2021**புரட்டாசி31**ஞாயிற்றுக்கிழமை** துவாதசி திதி மாலை 05.39 வரை பின்புவளர்பிறை திரியோதசி.

நட்சத்திரம்சதயம் நட்சத்திரம்காலை 09.52 வரை பின்பு பூரட்டாதி.

யோகம் நாள்முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

சுபமுகூர்த்த நாள்.

சுபமுயற்சிகளை செய்யஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,

எம கண்டம் – பகல் 12.00 – 01.30,

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,

சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

இன்றைய ராசிப்பலன் –  17.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு இல்லத்தில் இனிய செய்திகள் வந்துசேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைதரும்.வருமானம்பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன்செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்காகஎதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலைநிலவும். உறவினர்களுடன் மனக்கசப்புஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். நண்பர்கள் தேவையறிந்துஉதவுவார்கள். சுபகாரிய முயற்சிகளில்நிதானம் தேவை.

கடகம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள்தோன்றும். வாகனங்களில் செல்லும் பொழுதுநிதானம் தேவை. சுபகாரியங்களைதவிர்க்கவும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில்மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில்பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பெரியமனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல்பாதிப்புகள் குறையும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.

கன்னி

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் பெருமை அடையப்போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாகஇருக்கும். சுப காரியங்கள் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம்அதிகமாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உடன் இருப்பவர்களுடன் சிறுமனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பரசெலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் எடுக்கும் முயற்சியில்ஏற்றம் ஏற்படும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளின்உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும்சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சேமிக்கும் அளவிற்குவருமானம் பெருகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பணவரவு அமோகமாகஇருக்கும். குடும்பத்தில் சந்தோஷம்குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள்படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.வீட்டுதேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த கடன்வசூலாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறியசெலவுகள் ஏற்படலாம். விலை உயர்ந்தபொருட்கள் வாங்கும் போது ஒருமுறைக்குபலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உற்றார்உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமைஅதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள்நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமானவெளியூர் பயணங்களால் அனுகூலமானபலன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான லாபம்இருக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் குடும்பத்தில்மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள்தோன்றும். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *