ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கமும் ராசி பலனும்

இன்றைய ராசி எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா!!! கவலையே வேண்டாம். குரு பகவானின் அருளைப் பெற்று இன்றைய நாளை தொடங்கவும்.

10.10.2021* புரட்டாசி 24* பஞ்சமி திதி இரவு 2.14மணி வரை அதன்பின் சஷ்டி திதி

நட்சத்திரம் : அனுஷம் பகல் 2.44 மணி வரை அதன் பின் கேட்டை நட்சத்திரம்

யோகம் : மரணயோகம் நாள் முழுவதும்

நேத்திரம் : 1

ஜீவன் : 1/2

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் 10 மணி வரை , பகல் 2.00 மணி வரை 4.30 மணி வரை,மாலை 6.00 மணி 7.00 மணி வரை,இரவு 9.00 மணி 12.00 மணி வரை

இராகு காலம் : மாலை 4.30 மணி வரை 6.00 மணி வரை

எம கண்டம் : பகல் 12.00 மணி வரை 1.30 மணி வரை

குளிகை : மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

இன்றைய ராசி பலன் 10.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். மற்றவர்களுடன் பேசும்பொழுது மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். தாயின் ஆறுதல் கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்

ரிஷபம்

உங்களின் ராசிக்கு கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள் குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும் சக வியாபாரிகளுடன் பிரச்சனை ஏற்பட்டதால் பொறுமையுடன் இருத்தல் அவசியம் ஆஞ்சநேயர் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பணம் இருப்பதால் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படாது தாய்வழியில் ஆதாயம் கிடைக்கும். மனைவிவழி மூலம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள் . தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளை தகர்க்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உற்சாகத்துடன் காணப்படுவீர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு செலவு செய்திட நேரிடும் வியாபாரம் சுமாராக இருக்கும் துர்க்கை வழிபாடு நன்மையை கொடுக்கும்

சிம்மம்

உங்களின் ராசிக்கு காரியங்கள் அனுகூலமாகும் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் .பொறுமையை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தினர் உங்கள் யோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள் .விநாயகர் வழிபாடு மகிழ்ச்சியை கொடுக்கும்

கன்னி

உங்களின் ராசிக்கு இன்று சோர்வு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள் பிள்ளைகளால் பிரச்சினை ஏற்பட்டாலும் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது வியாபாரத்தில் விவாதங்களை தவிர்க்கவும். மகாலட்சுமியை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உறவினர்களால் நன்மை ஏற்படும் .குடும்பத்தில் உங்களது ஆலோசனைக்கு முக்கியத்துவம் உண்டு. வியாபாரத்தில் அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்க நேரிடும் முருக வழிபாடு நன்மையை கொடுக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்து விடுவீர்கள் மாலையில் பள்ளி கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள் குடும்பத்தில் பெரிய அவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். கந்த கடவுளை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு

உங்களின் ராசிக்கு உற்சாகத்துடன் காணப்படுவீர்கள் மன உறுதியுடன் இருப்பீர்கள் தந்தைவழி மூலம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் சிவ பெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்

மகரம்

உங்களின் ராசிக்கு புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய செலவு செய்திட நேரிடும் .அருகில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் நன்மை கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு தெய்வ அனுகூலம் மிகுந்த நாள். பிள்ளைகளால் வீட்டில் உற்சாகமும் கலகலப்பான சூழ்நிலையும் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும் மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி உண்டாகும்

மீனம்

எதிலும் நிதானமாக செயல்படுவது அல்லது புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும் தாய்வழி உறவுகளால் செலவு ஏற்படும் வீண் விவாதம் ஏற்படும். பெரியவர்கள் அரவணைப்பாக இருப்பார்கள் வியாபாரம் சுமாராக இருக்கும் வெங்கடேச பெருமாளை வழிபடுவது நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *