ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

நவராத்திரி இரண்டாம் நாளில் பஞ்சாங்கமும் உங்களின் ராசி பலனும்….

நவராத்திரி இரண்டாம் நாளான இன்று ராஜராஜேஸ்வரி தாயின் அருளைப் பெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மங்கல நாளான வெள்ளிக்கிழமையான இன்று உங்களது குலதெய்வத்தையும் அம்மனையும் வழிபட்டு அன்னையின் அருளை முழுவதுமாக பெற்று வாழ்வு செழிக்க வழிவகை செய்யுங்கள்..

இன்றைய (08-10-2021) நாள் உங்களின் ராசி பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்!!

இன்றைய  பஞ்சாங்கம்

08.10.2021*புரட்டாசி 22*வெள்ளிக்கிழமை*துதியை திதி பகல் 10.49 வரை பின்புவளர்பிறை திரிதியை.

நட்சத்திரம் சுவாதி மாலை 06.59 வரை பின்பு விசாகம்.

யோகம் நாள்முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 1/2.

லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள்.

சுபமுயற்சிகளை செய்யஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்–  மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் –  08.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் துணிச்சலோடுசெய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின்அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண முயற்சிகளில் இருந்ததடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில்இருப்பவர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்தஉதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள்உருவாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில்சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்றசெலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கநேரிடும். தொழில்சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றிவாய்ப்பு கிடைக்கும். எதிலும் கவனம் தேவை.

கடகம்

உங்களின் ராசிக்கு உத்தியோக ரீதியாகநெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும்முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால்அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியானவெளியூர் பயணங்களால் நற்பலன்கள்கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடுஉண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகள் மூலம் ஆனந்தமானசெய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவிகிடைக்கும். பொன் பொருள் வாங்கிமகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்லமுன்னேற்றம் உண்டாகும். தொழிலில்எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கன்னி

உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் காரியங்களில்வெற்றி பெற அருகில் உள்ளவர்களைஅனுசரித்து செல்வது நல்லது. உற்றார்உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சிஏற்பட்டாலும் சற்று செலவுகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் சிக்கனமாகஇருப்பது நல்லது.

துலாம்

உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் இருந்தபோட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில்சிலருக்கு வெளியூர்களில் பணிபுரியும்வாய்ப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் குடும்பத்தில்தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன்மனஸ்தாபம் ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள்வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சினைகுறையும்.

தனுசு

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம்உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்லவேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால்வியாபாரத்தில் லாபம் பெருகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு தொழில் ரீதியாக பொருளாதாரம்சிறப்பாக இருக்கும். திருமணசுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றிகிடைக்கும். நண்பர்கள் ஆதரவாகஇருப்பார்கள். உற்றார்உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களால்குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறுபாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில்உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துசெல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு எதிலும் கவனமுடன் செயல்படவேண்டிய நாள். உங்கள் ராசிக்குசந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம்இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல்இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில்கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்பொழுது எச்சரிக்கையுடனும்நிதானத்துடனும் செல்வது நல்லது.

மேலும் படிக்க : வைகாசி பௌர்ணமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *