Today panchangam : ஆடி சஷ்டி பஞ்சாங்கம் 10.08.2024
சஷ்டியில் விரதம் இருந்து வேண்டினால் முருகப்பெருமானிடம் கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே பொதுவாக குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள், திருமணம் ஆகாதவர்கள், தீராத கடன் ஆகிய பல காரணங்களுக்காக சஷ்டியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் உண்டு.
அதுவும் இன்றைய தினம் ஆடி சஷ்டி. இந்த மங்களகரமான நாளில் பஞ்சாங்கம் பார்த்து அதன்படி ஒரு காரியத்தை தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.
இன்றைய பஞ்சாங்கம் (10.08.2024)
குரோதி வருடம் ஆடி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை
திதி : இன்று அதிகாலை 01.44 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 02.09 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.
நாமயோகம் : இன்று பிற்பகல் 01.49 வரை சாத்தியம். பிறகு சுபம்.
கரணம் : இன்று அதிகாலை 01.44 பாலவம் . பின்னர் பிற்பகல் 02.49 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்
அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 02.09 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 06.03 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
பகல்: 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 04.45 முதல் 5.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
சூலம்: தெற்கு.
பரிகாரம்: தைலம்.
சந்திராஷ்டமம் : சதயம்