இன்றைய நாளின் பஞ்சாங்கம் (09.08.2024)
மாதங்களில் சிறந்தது ஆடி மாதம். தெய்வங்களை வழிபடுவதற்கான மாதம் ஆடி மாதம் என்று சொல்லும் வழக்கம் உண்டு . ஆடி வெள்ளியில் அம்மனை தரிசித்தால் அனுதினமும் உங்களை காத்து அருள் புரிவார் எனவே ஆடி வெள்ளிக்கிழமையான இன்று அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று தரிசித்து வருவது நல்லது. ஆடி வெள்ளி கிழமையில் பஞ்சாங்கம் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.
இன்றைய பஞ்சாங்கம் (09.08.2024)
குரோதி வருடம் ஆடி மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 09.08.2024
திதி : இன்று முழுவதும் பஞ்சமி
நட்சத்திரம் : இன்று முழுவதும் அஸ்தம்.
நாமயோகம் : இன்று பிற்பகல் 01.12 வரை சித்தம். பிறகு சாத்தியம்.
கரணம் : இன்று பிற்பகல் 12.46 வரை பவம் . பின்னர் பாலவம்.
அமிர்தாதியோகம்:
இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
பகல்: 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 5.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
சூலம்: மேற்கு.
பரிகாரம்: வெல்லம்