Today panchangam and Rasipalan : இன்றைய நாளும் ராசியும் எப்படி இருக்கு ?? (04.05.2024)
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (04.05.2024)
குரோதி வருடம் சித்திரை மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை 4.05.2024
திதி : இன்று மாலை 06.10 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
நட்சத்திரம் : இன்று இரவு 07.49 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.
நாமயோகம் : இன்று காலை 08.53 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.
கரணம் : இன்று காலை 07.23 வரை பவம். பின்னர் மாலை 06.10 வரை பாலவம். பின்பு கௌலவம்.
அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 05.55 வரை சித்தயோகம். பின்னர் இரவு 07.49 வரை மரணயோகம். பின்பு சித்த யோகம்
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
சூலம்: கிழக்கு.
பரிகாரம்: தயிர்.
இன்றைய ராசிபலன் (04.05.2024)
மேஷம் – நெருக்கடி குறையும்
ரிஷபம் – புரிதல் அதிகரிக்கும்
மிதுனம் – உதவி சாதகமாகும்
கடகம் – அனுசரித்து செல்லவும்
சிம்மம் – விவேகம் வேண்டும்
கன்னி – முன்னேற்றம் ஏற்படும்
துலாம் – பிரச்சனை குறையும்
விருச்சிகம் – புதுநபர் சந்திப்பு
தனுசு – விரயம் ஏற்படும்
மகரம் – திடீர் தனவரவு
கும்பம் – குழப்பம் நீங்கும்
மீனம் – பொறுமை வேண்டும்