செய்திகள்தமிழகம்

இன்று மகாதீபம் திருவண்ணாமலையில் வெளியூர் பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை சாமி சன்னதி முன்பு அகண்ட தீபமும், அதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன. திருவண்ணாமலை நகருக்குள் பக்தர்கள் வருவதை கண்காணிக்கும் விதமாக நகரின் எல்லை பகுதியில் 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • திருவண்ணாமலையில் வெளியூர் வாகனங்கள் வர அனுமதி இல்லை.
  • சாமி சன்னதி முன்பு அகண்ட தீபமும், அதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன.
  • கொரோனா பரவல் காரணமாக திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மகா தீபம்

நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளன. மூன்று நாட்களில் திருவண்ணாமலையில் வெளியூர் வாகனங்கள் வர அனுமதி இல்லை.

நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழா. இந்த ஆண்டுக்கான பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் தீபத் திருவிழா. முக்கிய நிகழ்வாக இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகின்றன.

அகண்ட தீபமும், மகா தீபமும்

அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற உள்ளன. 4 மணி அளவில் அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளன. பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணிய ஸ்வாமி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

மாலையில் சாமி சன்னதி பஞ்சமூர்த்திகள் முன்பாக எழுந்தருள்வார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி. சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். இப்போது சாமி சன்னதி முன்பு அகண்ட தீபமும், அதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *