இன்று உலக சாக்லேட் தினம் தெரியுமா?
சர்வதேச சாக்லேட் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூலை 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காதல் தினத்தையொட்டி பிப்ரவரி மாதம் வரும் தெரியும் அது என்ன இப்ப சாக்லேட் தினம்! எனக் கேட்கிறீர்களா?
மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல உணவுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை சாக்லேட். சாக்லேட் என்றால் பிடிக்காதவர்கள் எவரும் உண்டோ!
வரலாறு
மனித கண்டுபிடிப்பின் அருமையான ஒன்றை நினைவுபடுத்திப் பாராட்டும் வகையில் 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரப்படுகிறது.
அவரவர் வீட்டிலேயே சாக்லேட்கள் டெசர்ட்டாக செய்யப்பட்டு உண்டு வந்தனர். விதவிதமான சாக்லேட்கள் 19, 20 நூற்றாண்டுகளில் பெரிய பெரிய நிறுவனங்கள் செய்யத் தொடங்கினர்.
“Kiss me close your eyes and miss me…”
சாக்லேட் என்றாலே டைரி மில்க் என பைத்தியமாக சாப்பிடுபவர் பலர். கேட்பரீஸ் நிறுவனம் 1824 இங்கிலாந்தில் நிறுவப்பட்டு 1905இல் டைரிமில்க் உருவாக்கப்பட்டுள்ளது. 1860 நெஸ்லே நிறுவனம் போட்டியிட அதனைத் தொடர்ந்து சாக்லெட் சாஸ் என்றாலே ஹெர்ஷே நிறுவனம் 1894 ல் நிறுவப்பட்டது.
உலக சாக்லேட் தினம்
7 ஜூலை உலக சாக்லேட் தினமாக கொண்டாடப்பட்டாலும் இந்த தேதியில் பல வேறுபாடுகள் நாடுகளிடையே அமைந்துள்ளது. யுனைட்டட் ஸ்டேட்ஸில் தேசிய சாக்லேட் தினம் 28 அக்டோபர் கொண்டாடப்படுகிறது.
இரண்டாவது கொக்கோ உற்பத்தியாளர்களான மேற்கு ஆப்பிரிக்க நாடு 14 பெப்ரவரியை சாக்லேட் தினமாக கொண்டாடுகின்றனர்.
சாக்லெட்டில் உள்ள வேறுபாட்டை வைத்து வெவ்வேறு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
10 ஜனவரி-பிட்டர்ஸ்வீட் சாக்லேட் தினம்
28 ஜூலை-பால் சாக்லேட் தினம்
22 செப்டம்பர்-வெள்ளை சாக்லேட் தினம்
16 டிசம்பர்-சாக்லேட் எதையும் உள்ளடக்கிய தினம்
சாக்லேட் சாப்பிடுவது நல்லதா?
அதிகமான இனிப்பு தன்மையை கொண்ட சாக்லேட் சாப்பிடுவதால் பலருக்கு சர்க்கரை வியாதி வருவதாகச் சொல்கின்றனர். சாக்லேட்டில் டார்க் சாக்லேட் என்ற வகை உடலுக்கு நன்மை அளிக்கிறது.
டார்க் சாக்லேட்டின் நன்மைகள்
டார்க் சாக்லேட் ஊட்டச்சத்து மிகுந்தவை.
ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் என்று சொல்லப்படும் உடலுக்குத் தேவையானவை இதில் மிகுந்து காணப்படுகிறது.
ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை அதிகரித்து மற்றும் தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
மனித மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதயக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்க உதவுவதோடு உடல் சருமத்தை வெயில் இடமிருந்து பாதுகாக்கிறது.
சாக்லேட் தினத்தை எப்படி கொண்டாடுவதுனு யோசிக்கிறீர்களா! போய் நாலு சாக்லேட் வாங்குங்க. நீங்களும் சாப்பிடுங்க. மத்தவங்களுக்கு கொடுங்க என்ஜாய் பண்ணுங்க.