ஆன்மிகம்ஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய நாள் இனிதே தொடங்க உங்கள் ராசி எப்படி இருக்கு?

அனைவரும் இன்றைய நாளில் ஏதாவது ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணி இருப்பீர்கள். அது சுபகாரியமாக இருக்கலாம் ,பயணங்களாக இருக்கலாம் , தொழில் தொடர்பான விஷயமாக இருக்கலாம் அத்தகைய முக்கியமான விஷயங்களை தொடங்குவதற்கு முன்பு உங்கள் ராசிக்கு இன்று எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும் நீங்கள் செய்யும் செயலில் தைரியமாக முடிவெடுக்க உதவும்.

இன்றைய (06-09-2023) ராசி பலன்கள்

💥மேஷம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பார்வை தொடர்பான இன்னல்கள் நீங்கும். சிந்தனைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு ஏற்படும்.

பரணி : பிரச்சனைகள் குறையும்.

கிருத்திகை : கலகலப்பான நாள்.

💥ரிஷபம்

வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் அனுபவம் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமூகப் பணிகளில் பொறுப்புணர்ந்து செயல்படவும். வாசனை பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எண்ணியதை வெளிப்படுத்துவதில் சிந்தித்துச் செயல்படவும். வெளியூர் பணி நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

கிருத்திகை : அனுபவம் அதிகரிக்கும்.

ரோகிணி : பொறுப்புணர்ந்து செயல்படவும்.

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.

💥மிதுனம்

உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். வேலையாட்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.

திருவாதிரை : மனப்பக்குவம் உண்டாகும்.

புனர்பூசம் : நெருக்கடியான நாள்.

💥கடகம்

எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் நற்பெயர் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

பூசம் : நற்பெயர் கிடைக்கும்.

ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

💥சிம்மம்

வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். தனித்துச் செயல்படுவதற்கான சூழல் அமையும். அரசுப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் பேராசையின்றி செயல்படவும். மருத்துவத்துறை சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிக்கல் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : பயணங்கள் கைகூடும்.

பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.

💥கன்னி

தடைபட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டுக் குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

உத்திரம் : புரிதல் மேம்படும்.

அஸ்தம் : தடைகள் விலகும்.

சித்திரை : அனுபவம் கிடைக்கும்.

💥துலாம்

வியாபாரப் பணிகளில் விவேகம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். இணையம் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். திருப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : விவேகம் வேண்டும்.

சுவாதி : சிந்தித்துச் செயல்படவும்.

விசாகம் : சேமிப்பு குறையும்.

💥விருச்சிகம்

சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : ஆதரவான நாள்.

அனுஷம் : முடிவுகள் கிடைக்கும்.

கேட்டை : நெருக்கம் உண்டாககும்

💥தனுசு

நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : தீர்ப்பு கிடைக்கும்.

பூராடம் : ஒத்துழைப்பான நாள்.

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

💥மகரம்

வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். கற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கவலைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

திருவோணம் : ஆதாயம் உண்டாகும்.

அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

💥கும்பம்

உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். உடலில் இருந்துவந்த சோர்வு குறையும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயாருடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் தவறிய பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : மேன்மை ஏற்படும்.

சதயம் : சோர்வு குறையும்.

பூரட்டாதி : பொறுப்புகள் கிடைக்கும்.

💥மீனம்

போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

ரேவதி : தன்னம்பிக்கை மேம்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *