கல்விபோட்டித்தேர்வுகள்

ஐஏஎஸ் தேர்வை வெல்ல மூன்று நிலைத் தேர்வினை வெல்ல வேண்டும்!

ஐஏஎஸ் கனவு கொண்ட தேர்வர்கள் ஸ்மார்ட் வொர்க் மற்றும்  ஹார்டு வொர்க் இரண்டும் சமமாக பேலன்ஸ் செய்ய வேண்டும் என்று முந்தய பதிவில் பார்த்தோம். அத்துடன் மிகமுக்கியமாக முந்தய ஆண்டு நடந்த தேர்வுகளின்  கேள்வித்தாளை தொடர்ந்து  பயிற்சி செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது யுபிஎஸ்சி கேள்விகளின் போக்கு புரியத் தொடங்கும்.

அவ்வாறு  புரியத் தொடங்கும் போது நமது முயற்சிக்கு இன்னும் பலம் சேர்க்கலாம்.   தேர்வர்களின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் முந்தய ஆண்டு தேர்வுகளின் தொகுப்பானது பயிற்சி செய்யும் பொழுது  எதை படிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பாடத்தினை எப்படி படிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் இருக்கும் முக்கியத்துவம் நாம் அறிந்து கொள்ள முடியும். அத்துடன் எந்தப் பாடத்திற்கு எது  பொருந்தும் என்பதும் புலப்படும். 

ஐஏஎஸ் கனவை வெற்றி பெற முதல்நிலை மற்றும் முக்கியத் தேர்வு,  நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஐஏஎஸ் கனவு தேர்வை வெற்றிக் கொள்ள  முந்தய ஆண்டு கேள்வித்தாளை பயிற்சி செய்துவது தினமும்  100 கேள்விகள் வீதம படித்து வர வேண்டும். அத்துடன் பொது அறிவுப் பாடங்களை தீர்க்கமாக ஆழமாக படித்தலுடன் படித்தலை தேர்வு மூலம் சரிப்பார்த்து படித்தது சரியாக நினைவில் வைத்து கொண்டிருக்கின்றீர்களா என்பதனை  தேர்வு  மூலம் படித்ததை பரிசோதித்து படியுங்கள். 

போட்டி தேர்வில்  வெற்றி பெற பொது அறிவுப் பாடங்களான  அறிவியல், நடப்பு நிகழ்வுகள்,  கணிதம், வரலாறு, சுற்றுசூழலியல், இந்திய பொருளாதாரம்,  அரசியல் அறிவியல் பாடங்களுடன் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தேசியம், மாநில நடப்புகள், ஒப்பந்தங்கள், நிகழ்வுகள் போன்றப் பாடங்களிலிருந்து கேள்விகள் ஐஏஎஸ்  பிரிலிம்ஸ் தேர்வில் கேட்க்ப்படுகின்றது.100 கேள்விகள் கொண்ட இந்தப் பொதுஅறிவு தாளினை 2 மணி நேரத்தில்  200 மதிபெண்களுக்கு எழுத வேண்டும். 

அத்துடன்  முடிவெடுத்தல், ரீசனிங், ஆப்டியூட், காம்பிரிகென்சன் பாடங்களை இரண்டாம் தாளினை வெற்றி கொள்ள வேண்டும். 80  கேள்விகள் இரண்டு மணி நேரம் கொண்ட தேர்வில் வெற்றி பெறுபவர்கள் முதன் நிலை தேர்வினை வெற்றிகரமாக எழுதி தேர்வு பெறுவோர்கள் முக்கியத் தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். முக்கியத் தேர்வில் மொழிப்பாடங்களுடன் 7 தாள்கள்  கொண்ட தேர்வினை விரிவுரையாக எழுதி  மதிபெண்கள் அதிக அளவில் எழுத்திருக்க வேண்டும்.  அதன்பின் கட் ஆப் வைத்து தேர்ச்சி வீதம் நிர்ணயிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவோர்கள் நேரடித் தேர்வுக்கு தகுதிப் பெறுவோர்கள் நேரடி தேர்வில்  வெற்றிப் பெறுவோர் கட் ஆப் மதிபெண்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட  காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேர்ச்சி  பெறுவார்கள். 

அவ்வாறு நேரடி தேர்வில் தேர்ச்சி பெறுவோர்கள் தாங்கள் எடுத்த மதிபெண்களின்படி தேர்வை வென்று மதிபெண்களுக்கு யூபிஎஸ்சியின் 22 பணியிடங்களில் ஒன்றில் பயிற்சி பெறுவார்கள் பணியிடங்களுக்கு ஏற்ப பயிற்சிக் காலங்கள் மாறுபடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *