பெண்களுக்கே உரிய அழகை பாதுகாக்க..!!
அடிக்கடி மருதாணி போடுவது பாத வெடிப்புக்கும் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது மருதாணி. பாதங்களில் வெடிப்புகள் இருந்தால் வாரம் ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த பிறகு வயிறு கோடுகளை தழும்புகளை மறைக்க நல்லெண்ணெய் சிறிதளவு, மஞ்சள் தூள் கலந்து மசாஜ் செய்து குளித்து வாருங்கள்.
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்து வேலை செய்பவர்களுக்கு வேலையை முடித்ததும், கைகளை ஸ்கிரீன் தடவிக் கொள்ள வேண்டும். நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு மெல்லிய துணியால் கட்டிக் கொண்டு சிறிது நேரத்திற்கு அப்படியே படுத்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் கண்கள் இளமையுடன் காணப்படும்.
கண்களுக்கு அடியிலுள்ள கரு வளையங்கள் மறையும். இரவில் தினமும் கண்களுக்குள் ஒரு துளி விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தூங்குவதால் கண்கள் பிரகாசமாக மாறும். பாதாம் பருப்பை ஊற வைத்து மறு நாள் காலை அரைத்து பாலில் கலந்து சிறிதளவு முகத்திற்கு தடவி கொள்ளுங்கள்.
இதை சாப்பிடவும் செய்யலாம். சருமம் நல்ல ஊட்டம் பெறுவதுடன் முதுமையைத் தள்ளிப் போடவும் உதவுகிறது. வயதாக வயதாக சருமத்திற்கு சோப்பு உபயோகிப்பதை குறைத்து கொள்ளுங்கள்.
பாசிப்பயிறு மாவு, ஆவாரம்பூ பொடி, கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு பொடி, சந்தனப் பொடி, மகிழம் பூ பொடி, கிச்சிலி கிழங்கு பொடி ஆகிய அனைத்தையும் காயவைத்து அரைத்த பொடியை தினமும் சோப்பிற்கு பதிலாக உபயோகித்து வரவும்.
சருமம் பாதுகாப்பாக இருப்பதுடன் பின் தொந்தரவுகள் இல்லாமல் உங்கள் ஸ்கினை பாதுகாக்கும். வாசனையாகவும் இருக்கும்.