கொரோனா வைரஸ் தடுக்க
கொரோனா வைரஸ் தடுக்க எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க. கருஞ்சீரகம், பப்பாளி, கேரட் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். நாளொன்றுக்கு தினமும் ட்ரை ஃப்ரூட்ஸ், வால்நட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சி சட்னி, பூண்டு சட்னி அல்லது 3 பூண்டை பாலில் கலந்து கொதிக்க வைத்து குடிக்கலாம். நட்சத்திர சோம்பு அல்லது அண்ணாச்சி பூவை கிரேவியில் சேர்த்து கொள்ளலாம்.

பிரியாணி சமைக்கும் போதும் இதை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மசாலாப் பொருட்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியவை.
பிற நாட்டில் விளையக்கூடிய பழங்களை தவிர்த்து விடுங்கள். நம் நாட்டிலேயே இயற்கையாக விளையக்கூடிய உள்ளூரில் விளையும் பழங்கள் காய்கறிகள் கீரைகளை அன்றாடம் எடுத்துக் கொள்வது நல்லது.
அசைவ உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். முடிந்த வரை கடைகளில் வாங்கி உண்ணுவதை தவிர்த்து விடுங்கள். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேன் அதிகம் பயன்படுத்தலாம்.
சர்க்கரை நோய், இருதய நோய் இல்லாதவர்களுக்கு தேங்காய் எண்ணெயை உணவில் அளவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி தோல் சீவி, மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இது குடித்து வரலாம். சப்பாத்தி, கிரேவி செய்யும் போது கருஞ்சீரகம் அதில் சேர்த்து சமைத்து உண்ணலாம். காபி, டீக்கு பதிலாக பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், துளசி இலை, ஏலக்காய், இஞ்சி, பனைவெல்லம், உலர்ந்த திராட்சை, சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வரலாம்.
ஸ்ட்ராபெர்ரி, பிஸ்தா, கருப்பு திராட்சை போன்றவற்றை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை கொய்யா, ஆரஞ்சு, எழுமிச்சை, குடை மிளகாய், உலர் திராட்சை பழங்கள், அன்னாசி பழம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேக வைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். முருங்கைக் கீரை சூப் செய்து குடித்து வரலாம். கீரை, பூண்டு, இஞ்சி இவற்றை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தக்காளி மிளகு ரசம் தினமும் வைத்து சாப்பிடுங்கள். தக்காளி சூப்பில் வெங்காயத் தாள் சேர்த்து குடிக்கலாம்.
ஆண்கள் துளசி இலைகளை இரண்டு அல்லது மூன்று கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம். இதையெல்லாம் தினமும் ஃபாலோ பண்ணா நம்மை கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.