மனநோய் அகல இதனை படியுங்கள்
உலகில் மனிதனின் வாழ்க்கை மிக கடுமையான சூழலில் தள்ளப்படும் பொழுது முதலில் அடிபடுவதும் அவஸ்தை படுவதும் மனம். வாழ்க்கையின் அழுத்தம் மன அழுத்தமாக மாறுவதை தடுக்க இயலாத நிலையில் அதை சரி செய்யும் வழியையே நாம் கண்டறிய வேண்டும்.
அகத்தை சரிசெய்ய ஆன்மீகமே சிறந்தது. அகம் என்ற சொல் உள்புறம் என்ற பொருள் அளிக்கும். உடலில் உள் இருக்கும் மனதை சரி செய்யும் மருத்துவர் இறைவனே!
மனநோய் விலக அபிராமி அந்தாதியின் இருபத்தி ஏழாவது பாடலைப் படியுங்கள்.
27. மனநோய் அகல
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.
மேலும் படிக்க : ஒரு மனிதனுக்கு இது இருந்தா போதும் .. வேற எதுமே வேண்டாம்
விளக்கவுரை
அபிராமி அன்னையே! நான் அகத்தே கொண்டிருந்த ஆணவம், கன்மம், மாயை என்கிற பொய் ஜாலங்களை உடைத்தெறிந்தாய். பக்திக்கனல் வீசும் அன்பான உள்ளத்தினை அளித்தாய். இந்த யுகத்தில் நின் தாமரை போலும் சேவடிக்குப் பணி செய்ய எனக்கு அருள் புரிந்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம் துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். பேரழகு வடிவே! நின் அருளை எப்படி நான் வாய்விட்டு உரைப்பேன்!