ஐஏஎஸ் கனவா பயிற்சியுடன் ஸ்மார்ட்டாக செயல்படுங்கள்!
இந்திய ஆட்சிப்பணியில் வேலைவாய்ப்பு பெற படித்து கொண்டிருக்கும் தேர்வர்களே உங்களுக்கான ஆங்கில அடிப்படை அறிவு நீங்கள் வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் முயன்றால் நிச்சயம் சாத்தியமே. ஆங்கில அடிப்படை அறிவு போதுமானது உங்கள் கனவு தேர்வில் வெல்ல
யூபிஎஸ்சி தேர்வை நாம் தமிழில் எழுதலாம் எளிதானதே அதற்கான மெட்டிரியல்ஸ் எளிதில் கிடைப்பதில்லை என்ற குறைபாடு இருக்கின்றது.
ஆனால் நாம் இதனை எளிதில் கடக்க தமிழ் நாட்டில் பொதுஅறிவுப் பாடங்கள் சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் எளிதில் கிடைக்கின்றது. அதனைப் பின்ப்பற்றி படியுங்கள் அத்துடன் சுய டிரான்ஸ்லேசன் அவசியம் ஆகும். மேலும் என்சிஆர்டி மற்றும் சில எழுத்தாளர்களின் ஆங்கிலப் பதிப்புகள் எளிதில் தமிழில் கிடைக்கப் பெறலாம். கருத்துக்களை எளிதில் உங்கள் பாணியில் எழுதலாம் ஆனால் நிறைய ரெபரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
யூபிஎஸ்சியின் பிரிலிம்ஸ் தேர்வை வெல்ல நாம் பொது அறிவு பாடங்களான வரலாறு மற்றும் அறிவியல், பொருளாதாரம் சுற்றுச்சூழலியல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றை நாம் காண்டெம்பரரி கன்வென்சனல் பகுதிகளை நாம் பின்ப்பற்றி படிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
தினமும் தவறாமல் 100 முந்தய ஆண்டு கேள்விகளை படிக்க வேண்டியது அவசியம் ஆகும். இதனை தொடர்ந்து படிக்க வேண்டியது அவசியம் ஆகும். படித்தலுடன் அனலைஸ் செய்து தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறலாம்.
இரண்டாம் தாளான ரீசினிங் ஆப்ஸ் குறித்து ஸ்மார்ட் மற்றும் ஹார்டு வொர்க் செய்து பயிற்சி செய்ய வேண்டும். ஆங்கிலமும் இரண்டாம் தாளில் காம்பிரிகென்ஸாக வரும். ஆங்கிலத் திறன் கொண்டவர்கள் ஆங்கிலத்தில் அதிக முக்கியதுவம் கொடுத்து தகுதி தாளாக இரண்டாம் தாள் இருப்பதால் வெற்றிக் கேற்ப ரீசனிங்கில் உழைத்து ஸ்மார்ட்டாக செயல்படுவார்கள்.
ஆனால் போட்டி தேர்வுகள் எல்லாம் தற்காலத்தில் மிகுந்த சவால் நிறைந்த கேள்விகளை கொண்டதாகவுள்ளது. இதனை குறிப்பிட்ட அந்த நேரத்தில் சமாளிக்க சார்ட்கட்களை நாம் கற்றுக் கொண்டு தேர்வை அணுக வேண்டும். எந்த ஒரு பாடமும் தொடர்ந்து அற்ப்பணிப்பு உணர்வுடன் 6 மாதம் படித்து பயிற்சி செய்தால் நிச்சயம் அப்பாடத்தில் தேர்ச்சி பெற 6 மாதம் அதிகப் பட்சம் போதுமானது ஆகும்.
ஐஏஎஸ் கனவு தேர்வு என்பதால் தேர்வர்கள் நேரம் காலம் பார்க்காமல் படிக்கத் தொடங்கியிருப்பார்கள் அதே சமயம் படிக்கும் நேரம் உடல் நலம், மன உறுதி, சுற்றியுள்ள சூழல் அனைவருக்கும் ஒன்றுபோல் அமைவதில்லை. ஆனால் அதில் பாதகமும் இல்லை, அதிகம் போராடிப் படிப்பவர்களால் தேர்வை வெல்ல முடியும் என்பது நிஜமாகும்.