தாய்ப்பால் சுரப்பதற்கு ஏற்ற உணவுகள்
குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமான சத்தான உணவு தாய்ப்பால் தான். இதனால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கவும். பெண்களின் அழகு அதிகரிக்கும்.
மசாலா பொருட்களுள்
பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கு பிரசவத்திற்குப் பிறகு இந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு சாப்பிடுவதால் தாய்ப்பாலின் சுவை அதிகரிக்கும்.
உணவில் பூண்டை அதிகம் சேர்த்துக் கொள்வதால், பூண்டு பற்களை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டு வரலாம். இதனால் தாய்ப்பால் நன்கு கூடும். தாய்ப்பால் குறைவாக சுரக்கும் பெண்களுக்கு சீரகம் மிகவும் அருமருந்தாகும். சீரகத்தை வறுத்து பொடி செய்து உண்ணும் உணவில் சேர்த்து வர தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
மசாலா பொருட்களுள் ஒன்றான பட்டையை தாய்மார்கள் ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை பட்டைத் தூள் அரை ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர, தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சமையலறை பொருள்தான் வெந்தயம்.
கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம்
அரை ஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வர அல்லது வெந்தயத்தை முளை கட்ட வேக வைத்தும் சாப்பிடலாம். பூண்டு, வெந்தயம், சீரகம், அரிசி அனைத்தும் கலந்து கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம்.
சோம்பு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. சிறிது சோம்பு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வரலாம். வெந்தயம், சோம்பு, சீரகம், பூண்டு, கருவாடு சேர்த்து வரலாம். எந்த ஒரு உணவையும் ஆரம்பத்திலேயே நீங்கள் சாப்பிட்டு குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது, அந்த உணவுகளை குழந்தைகளும் வளர்ந்த பிறகு விரும்பி உண்ணுவார்கள்.
ஆறு மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம்
குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள் நீங்கள் எல்லா உணவுகளையும் சாப்பிட வேண்டும். நீங்கள் சாப்பிடும் போது அது குழந்தைகளுக்கும் அந்த உணவு ஏற்றதாக அமையும் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். குழந்தை பிறந்த பிறகு குறைந்தது ஆறு மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.
அந்த காலத்தில் முன்னோர்கள் ஒரு வயது வரை தாய்ப்பால் ஊட்டுவார்கள். ஒவ்வொரு தாய்மார்களும் தன் குழந்தைக்கு ஆறு மாதம் வரை குறைந்தது தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் அவசியமாகும். இதை ஒவ்வொரு தாய்மார்களும் உணர்ந்து அதற்கான உணவுகளை உண்டு குழந்தைகள் ஆரோக்கியமாக பெற்றெடுத்து வளர்க்க வேண்டும்.