இம்யூனிட்டி பவர் வேண்டுமா? இந்தக் கஞ்சி சாப்பிடுங்க!
குளிர்காலத்தில் நோய்களை அண்ட விடாது இந்த கஞ்சி. கஞ்சி ஒரு எளிமையான உணவு. இரும்புச்சத்து மிக்கது. முருங்கை இலை கஞ்சி சுவையாக செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தரக்கூடியது இந்த கஞ்சி.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தரக்கூடிய கஞ்சி.
- கஞ்சி ஒரு எளிமையான உணவு.
- இரும்புச்சத்து மிக்கது.
முருங்கைக் கீரை கஞ்சி
தேவையான பொருட்கள்
பச்சரிசி அரை கப், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் தேவையான அளவு. முருங்கைக்கீரை அரை கப், உப்பு தேவையான அளவு. தேங்காய் துருவல் கால் கப், சோம்பு கால் ஸ்பூன், சீரகம் கால் ஸ்பூன், சின்ன வெங்காயம் 5, தேங்காய் முதல் சின்ன வெங்காயம் வரை இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை விளக்கம்
பச்சரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரைக்க வேண்டியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் குக்கர் வைத்து ஊற வைத்த அரிசியுடன், முருங்கைக் கீரை, உப்பு, இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்.
சிறிது நேரம் கழித்து ப்ரஷர் அடங்கியதும். திறந்து அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வேகவிடவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வெந்ததும் இறக்கி வைத்து சூடாக இந்தக் கஞ்சியை பரிமாறலாம்.