ஆரோக்கியம்வாழ்க்கை முறைவாழ்வியல்

வாழ்க்கையில் முன்னேற துடிப்பவரா?

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பது நம் அனைவருக்கும் உடலையும் மனதையும் புத்துணர்வாக வைத்திருக்க உதவுகிறது. என்பது நாம் அனைவருமே அறிந்த ஒன்றாகும். நம் முன்னோர்கள், நம் பெரியவர்களும் இதை கடைபிடித்து உள்ளனர். ஏன் வாழ்க்கையில் ஜெயித்த பல முன்னோடிகளும் இதைத்தான் பின்பற்றினார்கள்.

வாழ்க்கையில் முன்னேற

நாமும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால், நாமும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கின்ற சிக்கலை தவிர்ப்பதற்கு, இந்த அதிகாலையில் எழுவது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

அதிகாலையில் எழுந்து படிப்பது, சூரிய நமஸ்காரம் செய்வது, அதிகாலையில் எழுந்தவுடன் குளிப்பது, அதிகாலையில் எழுந்தவுடன் காலைக் கடனை முடிப்பது, இவை எல்லாம் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நாம் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்றால் இரவில் சீக்கிரமாக உறங்கச் செல்ல வேண்டும்.

ஹார்மோன் சுரப்பி

அப்பொழுதுதான் காலை அதிகாலையில் எழுந்திருக்க முடியும். இரவே நாம் முடிவெடுத்து விட்டு படுக்க வேண்டும். நம் மூளையில் அலாரம் செட் செய்து கொள்ளும். இதனால் நாம் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை ஆட்டோ மேட்டிக்காக நம்மை எழுப்பி விடும். நம் ஹார்மோன் தூண்டுதலால், நம் மூளை ஹார்மோன் சுரப்பி மூலம் சரியான உரிய நேரத்தில் எழுப்பிவிடும்.

இரவில் தூங்கச் செல்லும் போது அடுத்த நாள் காலை நாம் என்ன செய்ய வேண்டும் என்று எதையும் முடிவெடுக்காமல் படுப்பதால் தான் ஹார்மோன்கள் சுரக்காமல் நாம் அதிக நேரம் தூங்குகின்ற நிலை ஏற்படுகிறது. எனவே இரவில் தூங்க போகும் போது காலையில் நான் இந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து தான் ஒவ்வொரு நாள் இரவும் தூங்க வேண்டும்.

இரவு தூங்கும் போது நாம் தூங்கும் அறை, நல்ல காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும். இதனால் இரவில் நன்கு உறக்கம் வரும். குறைந்தது ஆறு மணி நேரமாவது உறங்க வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு உறங்கி அதிகாலையில் விழித்து, உடற்பயிற்சி செய்து, அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாக அன்றைய அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்.

நன்றாக பசி எடுக்கும் உடல் பருமன் தடுக்கப்படும். அன்று இரவும் விரைவிலேயே தூக்கம் வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூக்கம் வரும் போது, மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். காலையில் தூய்மையான ஆக்சிஜனை சுவாசித்து, நுரையீரல் வலுவடைவதோடு ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் வராது.

மூச்சுப் பயிற்சி, யோகா, உடலில் உள்ளுறுப்புகளை நன்மை பயக்கும். காலை கடன்களை விரைவாக வெளியேற்ற உதவி புரியும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்க பட்டு, உடல் நலனுக்கு மட்டுமல்லாமல், மன நலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்ததாக அமையும் . இந்த பழக்கம் பலருக்கும் கசப்பான ஒன்றாக உள்ளது.

இன்றைக்கு ஒரு நாள் மட்டும் தூங்கிக் கொள்ளலாம். நாளை விரைவில் எழுந்து படிக்கலாம், என்ற மன ஓட்டம் தான் செல்கிறது பலருக்கு. ஆனால் அதிகாலை எழுவது பல நன்மைகளைத் தருகிறது என்பதை உணர்ந்து, அதிகாலையில் எழுந்திருக்க இரவில் விரைவில் உறங்கச் செல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *