TNPSC தமிழ் தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்
1.கீழ்க்கண்டவற்றுள் தோப்பில் முகமது மீரானின் சாகித்திய அகாடாமி பரிசு பெற்ற நூல் எது ?
a) ஒரு குட்டி தீவின் வரைபடம்
b) சாய்வு நாற்காலி
C) கூனன் தோப்பு
d) துறைமுகம்
2. விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி ………… ஆகும்.
a) உவமை
b) உருவகம்
C) படிமம்
d) குறியீடு
3. தனது வறுமைமிக்க தன் இளமை வாழ்வை சார்லி சாப்ளின் ……….. என்ற வெற்றிப் படமாக்கினார்.
a) தி கிட்
b) சிட்டி லைட்ஸ்
c) தி கோால்டு ரஷ்
d) தி கிரேட் டிக்டேட்டர்
4. “விருந்து படக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து” இவ்விடிவில் அடிக்கோடிட்ட சொல்லுக்குரிய இலக்கண குறிப்பைத் தேர்க.
a) பண்புத்தொகை
b) எண்ணும்மை
c) வினைத்தொகை
d) பெயரச்சம்
5. “சொற்கேட்டார்க்கு பொருள் கண் கூடாதல்” என்று கூறியவர் யார்?
a) நச்சினார்க்கினியர்
b) தொல்காப்பியம்
c) இளம்பூரணர்
d) சேனாவரையர்
6. கூற்று 1: வாழ்த்துதல், செல்வத்தை வனங்குதல், வருபொருள் உரைத்தல் என்று மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பொற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.
கூற்று 2 : அறம், பொருள், இன்பம் , வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ, இரண்டோ குறைந்து வருவது பெருங்காப்பியமாகும்.
a) கூற்று 1 சரி கூற்று 2 தவறு
b) இரண்டும் சரி
c) இரண்டும் தவறு
d) கூற்று 1 தவறு கூற்று 2 சரி
7. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
a) திருவாசகம்
b) திருக்குறள்
c) திரிகடுகம்
d) திருப்பாவை
8. பெயர்ச்சொல்லின் வகை அறிக “இனிப்பு”
a) பொருட்பெயர்
b) சினைப்பெயர்
c) பண்புப்பெயர்
d) காலப்பெயர்
9. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக :
a) வேண்டும் பருக நாவினிக்க கம்பன் தமிழை
b) பருக வேண்டும் கம்பன் தமிழை நாவினிக்க
c) நாவினிக்க தமிழை கம்பன் பருக வேண்டும்
d) கம்பன் தமிழை நாவினிக்க பருக வேண்டும்