திருக்குறள் தேர்வு நோக்கி முக்கிய வினா விடைகள்
அரசு வேலையை எப்படியாவது வாங்கி தர வேண்டும் என்ற டிஎன்பிஎஸ்சி தேர்விற்காக தொடர்ந்து படித்து கொண்டிருக்கும் நண்பர்களுக்காக பொதுத்தமிழ் பாட பிரிவிலிருந்து ஒரு சில முக்கிய வினா விடைகளை பார்ப்போம்.
வினா விடைகள்
1. திருக்குறள் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு எது ?
விடை : 1812
2. திருக்குறளில் இடம் பெற்ற ஒரே ஒரு பழம் எது?
விடை : நெருஞ்சி
3. திருக்குறளில் இடம்பெறாத தமிழ் எழுத்துக்கள் எத்தனை?
விடை : 37
4. திருக்குறளில் “னி” என்ற எழுத்து எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது?
விடை : 1705 முறை
5. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் எது?
விடை : கடவுள், தமிழ்
6. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிர் எழுத்து எது ?
விடை : ஒள
7. திருக்குறளில் தொடக்கமும் முடிவும் எவ்வாறு அமைந்து உள்ளது?
விடை: அக ரத்தில் தொடங்கி னக ரத்தில் முடிந்து உள்ளது
8. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் ?
விடை : குறிப்பறிதல்
9. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்?
விடை : பனை, மூங்கில்
10. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை எது?
விடை : குன்றிமணி