டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான தமிழ்பாட வினாவிடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான கடந்த ஆண்டு கேட்கபட்ட தமிழ் பாட கேள்விகள் இங்கு கொடுத்துள்ளோம். நாம் மொழிப்பாடத்தில் நிறைய தினசஇ படித்து தேர்ந்திருந்தாலும் இதற்கு முன் வந்த தேர்வுகளில் மொழிப்பாடத்தில் கேட்கப்பட்ட வினாக்களை தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்க வேண்டியது அவசியமாகின்றது. தேர்வுக்கு எது தேவை என விழிப்புணர்வு கிடைக்கும் வெற்றி வசமாகும்.
தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் யார்?
விடை: நாமக்கல் கவிஞர்
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! என்று கூறும் நூல் எது?
விடை:புறநானூறு
புனையா ஓவியம் புறம் போந்தன்ன நூல் எது?
விடை:மணிமேகலை
நீதிநெறி விளக்கம் பாடியவர் யார்?
விடை: குமரகுருபர்
எந்த இதழில் பாரதியார் கருத்துப்பட ஓவியங்களை முதன் முதலில் தமிழில் அறிமுகப்படுத்தினார்?
விடை: இந்தியா
மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
விடை: ஈரோடு
மேலும் படிக்க : குரூப் 2 தேர்வுக்கான அறிவியல் ஹைலைட்ஸ் 7 படியுங்க!
ஆதிச்சநல்லூர் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை: தூத்துக்குடி
சேவல் என்பதன் எதிர்ப்பால் பெயர் என்ன?
விடை: பேடு
பள்ளர்களின் வாழ்க்கையை சித்தரித்து கூறுவதாக அமைந்த நூல் எது?
விடை: முக்கூடற்பள்ளு
“வேளாண் வேதம்” என்று அழைக்கப்படும் நூல் எது?
விடை: நாலடியார்
மேலும் படிக்க : ஒற்றுமை காணும் இந்திய! ஒளிரும் இந்தியா..