டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான தமிழ் வினா விடை
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான தமிழ் பாட பகுதிக்கான முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்புகளை கொடுத்துள்ளோம். தமிழ் மொழிப்பாடத்தில் முக்கியப் பகுதிகள் பல உள்ளன. தமிழ்ப்பாடபபகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் படிப்பதன் மூலம் நாம் படித்தப்பாடங்களை ரிவிசன் செய்வதுபோல் அமையும். முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட் கேள்விகள் அமைந்த பாடப்பகுதியிலே மற்றொரு கேள்வி அமைந்தால் தேர்வில் நாம் சரியான பதிலை கொடுக்க முடியும்.
வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர் என்று பாடியவர் யார்?
விடை: பாரதியார்
சீறாப்புராணம் எத்தனை விருத்தப்பாக்களைக் கொண்டது?
விடை: 5027
19ஆம் நூற்றாண்டைத் தமிழில் மறுமலர்ச்சி காலம் என்று போற்றப்படுபவர் யார்?
விடை: வள்ளலார்
டாக்டர் உ.வே.சா நூலகம் அமைத்த ஆண்டு எது?
விடை: 1942
ராமலிங்க அடிகளார் சத்திய தர்மசாலை நிறுவிய இடம் எது?
விடை:வடலூர்
மேலும் படிக்க : முந்தைய ஆண்டுகளுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடை மற்றும் விளக்கம்
எழுத்து,சொல்,பொருள், யாப்பு,அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதியவர்?
விடை: அகத்தியர்
“சுத்த தியாகி” என்று முத்துராமலிங்க தேவரை புகழ்ந்தவர் யார்?
விடை :பெரியார்
மதுரையில் உலகத்தமிழ் சங்கம் திறந்து வைக்கப்பட்ட ஆண்டு?
விடை:2016
உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்று கூறியவர் யார்?
விடை:நல்வேட்டனார்
“மாற்றம் எனது மானிடத் தத்துவம் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்” இது யாருடைய கூற்று?
விடை:கண்ணதாசன்
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கேள்விகளின் தொகுப்பு!