டிஎன்பிஎஸ்சிக்கான சிந்துவெளி நாகரிகம் வினா விடைகள் பகுதி – 3
வாழ்க்கையில் பலருக்கு லட்சியங்கள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் இருக்கும் இலக்கு கனவுகள் என்பது மாறுபடும். ஆனால் போட்டித் தேர்வர்கள் அனைவருக்கும் தேர்வை வெல்ல வேண்டிய கட்டாயம் மற்றும் தேவை இருக்கும். அரசு வேலை கிடைத்தால் இது செய்யலாம் அது செய்யலாம் என நிறைய கனவுகளுடன் படித்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு உதவும் வகையில் சிலேட்டுகுச்சி வினா விடைகளை தொகுத்துள்ளது .
இதனைப் பின்பற்றி படித்து இலக்கை அடையவும்.
1. ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை காணலாம் என்றவர்?
விடை : ஐராவதம் மகாதேவன்
2. சிந்துவெளி மக்கள் கண் , காது, தொண்டை, தோல் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தியது
விடை : கட்டில் (cuttle) மீன் எலும்பு
3. ஹரப்பா என்ற சிந்து மொழிச் சொல்லின் பொருள்
விடை : புதையுண்ட நகரம்
4. சிந்துவெளி மக்களின் எழுத்து முறை எந்த வகையைச் சேர்ந்தது?
விடை : சித்திர எழுத்து
5. இடிகாட்டு மேடு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
விடை : 1922
6. சிந்துவெளி நாகரிகத்தில் இருமுறை புதைக்கும் முறை இருந்த இடம்
விடை : லோத்தல்
7. பொருத்துக
1.காலிபங்கன்- பெருங்கற்கள் அடுக்குதல்
2.லோத்தல் – செம்பு அளவுகோல்
3.டோலவிரா -வட்ட , சதுர வடிவ கல்லறை (ம) வளையல் தொழிலகம்
4.ஹரப்பா – அரிசி கின்னம், கப்பல் தளம்
விடை : 3,4,1,2
8. சிந்துவெளி நாகரிகம் ஆரம்ப நிலை இருந்த இடங்கள்
விடை : ஆம்ரி , கோல்டிஜி
9. சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த பகுதிகள்
விடை : பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், இந்தியா
10. சிந்துவெளி மக்கள் வழிபட்ட முக்கிய கடவுள்
விடை : பசுபதி ( விலங்கு கடவுள் )