டிஎன்பிஎஸ்சிக்கான சிந்துவெளி நாகரிகம் வினா விடைகள் பகுதி -2
அரசுப் பணிக்காக அயராது படித்து வரும் அனைவருக்கும் சிலேட்டு குச்சியின் சிறிய முயற்சி..
வரலாற்றை படிப்பதன் மூலம் நம் வாழ்க்கையை மாற்றும் அரசு பணியை பெறுவோம்! கொடுக்கப்பட்ட வினா விடைகளை ரிவைஸ் செய்து பயன்பெறுங்கள்.
1. சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய பெரிய வகை மாடு
விடை : செபு
2.அக்காடிய பேரரசர் நாரம் சின் எந்த இடத்தில் அணிகலன்களை வாங்கியதாக கூறினார்?
விடை : மெலுக்கா
3.பொருத்துக
1.சங்கு. – ராஜஸ்தான்,ஓமன்
2.வைடூரியம்- நாகேஷ்வர்
3. கார்னிலியன் – ஷார்டுகை
4.செம்பு – லோத்தல்
விடை : 2, 3, 4, 1
4.1704 மி. மீ. வரை சிறிய அளவீடு கொண்ட அளவுகோல் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம்
விடை : குஜராத்
5.சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம்
விடை: லாஸ்ட் வேக்ஸ் ( மெழுகு அச்சில் உலோகத்தை உருக்கி ஊற்றி சிலை வடித்தல்)
6.கப்பல் கட்டும் தளம்
விடை : லோத்தல்
7.சிந்துவெளி மக்களின் நீளமான எழுத்து தொடர் எத்தனை குறியீட்டை கொண்டிருந்தது?
விடை : 26
8.முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
விடை : சுமேரியர்கள்
9.சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய பயன்படுத்தியது
விடை : சிவப்பு நிற மணிகற்கள்(carnelian)
10. இந்திய தொல்லியல் துறையின் தலைவர்
விடை : அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் (நில அளவையாளர் )