கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சிக்கான வரலாறு குப்தர்கள் பாடப்பகுதி வினா விடைகள்

தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ளும் முயற்சியில் கல்வி அது மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிகாட்ட வேண்டும்….

சத்குரு ஜக்கி வாசுதேவ்

வினா விடைகள்

1.புருஷா என்பதன் பொருள்

விடை : அனைவருக்கும் மேலானவர்

2.சமுத்திர குப்தரின் வெற்றிகளைப் பற்றி விரிவாக வருகின்ற கல்தூண் எங்கு உள்ளது?

விடை : அலகாபாத்

3.குப்த பேரரசர்களில் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ?

விடை : சமுத்திர குப்தர்

4.குப்த அரசின் கருவூலத்தின் வருவாயைப் பற்றி குறிப்பிடும் நூல் எது?

விடை : நீதி சாரம்

5.காளிதாசர் அமரசிம்மர் போன்ற புகழ்பெற்ற கவிஞர்கள் இவருடைய ஆட்சிக்காலத்தில் இருந்தனர்?

விடை : இரண்டாம் சந்திர குப்தர்

6.அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று குறிப்பிடும் செப்பேடு எது?

விடை : பஹார்பூர் செப்பேடு

7.குப்தர் காலத்தில் உபரிகா என்ற வரி யாரிடம் இருந்து பெறப்பட்டது?

விடை : குத்தகைக்கு பயிரிடுவோர்

8.ஷேத்ரா, கிலா போன்றவை எதன் மீதான வரிகள்?

விடை : நிலங்கள் மீதான வரி

9.குப்தர்களின் வணிக முறை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை : இரண்டு வகைப்படும்.அவை சிரேஷ்டி,சார்த்தவஹா

10.குப்தர்களின் தலைநகரம் எது?

விடை : பாடலிபுத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *