டிஎன்பிஎஸ்சிக்கான வரலாறு குப்தர்கள் பாடப்பகுதி வினா விடைகள்
அனைத்திற்கும் நாமே பொறுப்பு. நான் ஏழையாக சாதாரணமானவனாக பிறந்தேன். வாழ்க்கை முழுவதும் போராட்டங்களையே சந்தித்துள்ளேன் என்று நீங்கள் சொல்லலாம்.அதற்கு காரணம் நீங்களே குற்றத்தை யார்மீதும் சுமத்தாதீர்கள். அதற்கு நீங்களே பொறுப்பு.
சுவாமி விவேகானந்தர்
வினா விடைகள்
1.கவிராஜா என்ற பட்டம் பெற்ற குப்த பேரரசர்
விடை : சமுத்திரகுப்தர்
2.சகாரி என்ற பட்டப்பெயர் கொண்ட குப்த பேரரசர் யார்?
விடை : இரண்டாம் சந்திரகுப்தர்
3.பொருத்துக
a) தன்வந்திரி – கட்டிடக்கலை நிபுணர்
b) விட்டல் பட்டர் – ஜோதிடர்
c) காளிதாசர் – மருத்துவர்
d) காக பானகர் – மாய வித்தை
e) சன்கு – சமஸ்கிருத புலவர்
விடை : c,d,e,b,a
4. வாகடக இளவரசர் மகளை மணம் முடித்தவர்?
விடை : இரண்டாம் சந்திரகுப்தர்
5. பிரயாகை மெய்கீர்த்தி என்பதன் பொருள்
விடை : பாராட்டி புகழ்தல்
6. குப்த வம்சத்தின் கடைசிப் அரசர் யார்?
விடை : விஷ்ணு குப்தர்
7. அஸ்வமேத யாகம் நடத்திய குப்த பேரரசர்கள் யார்?
விடை : சமுத்திரகுப்தர், குமார குப்தர்
8. முதலாம் குமார குப்தரின் மகன்
விடை : ஸ்ரீ கந்த குப்தர்
9. குப்த பேரரசு எந்த நூற்றாண்டில் தோன்றியது?
விடை : கிபி மூன்றாம் நூற்றாண்டு
10. சமுத்திரகுப்தர் விந்திய மலைப் பகுதியில் அமைந்த அடவிகா ராஜ்யப் பிரதேசங்களை கைப்பற்றினார்.இங்கு அடவிகா என்பது எதனைக் குறிக்கிறது
விடை : அடர்ந்த காடு