டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான பொதுத் தமிழ் வினா விடைகள்
தோல்விகளை கண்டு துவலாமல் இவற்றை அடித்தளமாக்கியதால் உருவானது தான் வெற்றி.. தோல்விகள் பாடமானால் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்…
வினா விடைகள்
1.பூங்கொடி என்னும் நூலுக்காக தமிழக அரசு பரிசு பெற்றவர் யார்?
விடை : முடியரசன்
2.தமிழ்நாட்டின் ரவீந்திரநாத் தாகூர் என போற்றப்படுபவர் யார்?
விடை : வாணிதாசன்
3.மலரும் மாலையும், ஆசிய ஜோதி என்ற நூலை எழுதியவர் யார்?
விடை : தேசிய விநாயகம் பிள்ளை
4.நாட்டியம் நாடகம் இரண்டிற்கும் பொதுவாக பழக்கத்தில் இருந்த சொல்?
விடை : கூத்து
5.அழகின் சிரிப்பு என்ற நூலை எழுதியவர்
விடை : பாரதிதாசன்
6.இமயம் எங்கள் காலடியில் என்ற நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது.இந்த நூலின் ஆசிரியர் யார்?
விடை : ஆலந்தூர் மோகனரங்கன்
7.சாலை இளந்திரையன் பெற்ற விருது என்ன?
விடை : பாவேந்தர் விருது
8.சரஸ்வதி நூலகம் எங்கு அமைந்துள்ளது?
விடை : தஞ்சாவூர்
9.பகுத்தறிவு கவிராயர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை : உடுமலை நாராயண கவி
10. நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று மாதவியை குறிப்பிட்டவர் யார்?
விடை : இளங்கோவடிகள்
போட்டித் தேர்வுகளுக்கு போட்டிபட்டுக்கொண்டு படித்திருக்கும் நண்பர்களுக்காக சிலேட்டு குச்சி இதுபோன்ற தகவல்களை உங்களுக்கு வழங்கும்…