டிஎன்பிஎஸ்சிக்கான பொதுத் தமிழ் வினா விடைகள்
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே திறமையும் வெளிப்படுகிறது…
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி….
வினா விடைகள்
1.”தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது” என்ற பாடலை எழுதியவர்
விடை : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
2.”என் சரிதம்” யாருடைய வாழ்க்கை வரலாறு?
விடை : உ.வே சாமிநாதய்யர்
3.சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியம் கொண்ட நூல் எது?
விடை : முக்கூடற்பள்ளு
4.பொருத்துக
a) தண்ணீர் வங்கிகள் -முடியரசன்
b) தளை – நா. காமராசன்
c) கண் – சிற்பி பாலசுப்பிரமணியம்
d) பூக்கட்டும் புதுமை – ந. கருணாநிதி
விடை : d , c , b ,a
5.மனோன்மணீயம் கதையின் கண்வரும் துணை கதை
விடை : சிவகாமி சரிதம்
6.திவ்யப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்
விடை : பெரியவாச்சான்பிள்ளை
7.”வலவன் ஏவா வானவூர்தி”என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
விடை : புறநானூறு
8.சுதேசமித்திரன் இந்தியா போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர் யார்?
விடை : பாரதியார்
9.தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
விடை : வெ. இராமலிங்கனார்
10.உமர் கய்யாம் என்ற பாரசீக கவிஞர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர் ?
விடை : பதினோராம் நூற்றாண்டு