போட்டித் தேர்வர்களுக்கான பொதுத் தமிழ் வினா விடைகள்
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்… நீ நீயாக இரு !!!
அப்துல் கலாம்
வினா விடைகள்
1. இந்தியாவின் தேசிய பங்கு விகிதம் என்ற நூலின் ஆசிரியர் யார்
விடை : அண்ணல் அம்பேத்கர்
2. என்றுமுள தென்தமிழ் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
விடை : கம்பர்
3. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூட இல்லாத பறவை என்று பாடியவர் யார்?
விடை : ரசூல் கம்சதேவ்
4. எந்த நாட்டின் அணு துளைக்காத சுரங்க பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது?
விடை : உருசியா
5. சம்புவின் கனி என குறிப்பிடப்படுவது
விடை : நாவல் பழம்
6. பிரெஞ்சு குடியரசுத் தலைவரிடம் செவாலியர் என்ற விருதினைப் பெற்றவர்
விடை : வாணிதாசன்
7. சின்னசீறா என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை : பனு அகுமது மரைக்காயர்
8. “நாடாகு ஒன்றோ ,காடாகு ஒன்றோ”என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர் யார்
விடை : ஒளவையார்
9. அறத்துப்பாலின் கண்ணமைந்த இயல்கள்
விடை : பாயிரவியல், இல்லறவியல், துறவியல், ஊழியல்.
10. “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை” என்ற குறளில் இடம் பெற்றுள்ள அணி?
விடை : உவமை அணி