டிஎன்பிஎஸ்சி அன்பர்களுக்கான பொதுத் தமிழ் வினா விடைகள்
கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு
ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரின் பொன்மொழிகளை மட்டும் படிக்காமல் அதனை செயல்முறையாக நம் கனவுகளை நிஜமாக்க பாடுபடுவோம் நண்பர்களே.…..
வினா விடைகள்
1.துள்ளலோசை கொண்ட நூல் எது?
விடை : கலித்தொகை
2.சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும் சபைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும் என்ற பாடல் வரிகளை இயற்றிய கவிஞர் யார்?
விடை : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
3.கம்பராமாயணத்தில் ஆயிரம் பாடலுக்கு ஒரு முறை கம்பர் யாரை வாழ்த்திப் பாடியுள்ளார் ?
விடை: சடையப்ப வள்ளல்
4.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படுவது?
விடை : மதுரை
5.திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்?
விடை : 107
6.தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார்?
விடை : வீரமாமுனிவர்
7.அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல்?
விடை : முதுமொழிக்காஞ்சி
8.மன்னிப்பு எம்மொழிச் சொல்
விடை : உருது
9.இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் எழுந்ததும் படிக்கும் நூல் எது?
விடை : திருக்குறள்
10. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள்
விடை : ஏழு