போட்டித் தேர்வர்களுக்கான பொதுத் தமிழ் வினா விடைகள்
கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும். சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை கல்வியும் உழைப்பும் இருந்தால் போதுமானது….
வினா விடைகள்
1.மகாதம் எனப்படுவது
விடை : வித்தார கவி
2.உடம்பார் அழியின் உயிரால் அழிவர் என்று கூறியவர்
விடை : திருமூலர்
3.கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
விடை : எத்திராசன் என்ற அரங்கசாமி
4.ராமாயணத்தில் சுந்தரன் என்னும் பெயரால் வழங்குபவர் யார்?
விடை : அனுமர்
5.உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்னும் சிறப்பு பெயர் கொண்ட நூல் எது?
விடை : சிலப்பதிகாரம்
6.உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியாக கடவுளாக வழிபாடு செய்யப்பட்ட சித்தர்
விடை : கடுவெளிச் சித்தர்
7.திருக்குறளின் அறத்துப்பால்,பொருட்பால் ஆகிய இரண்டையும் லத்தின் மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?
விடை : வீரமாமுனிவர்
8.திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்?
விடை : கால்டுவெல்
9.தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர் யார்?
விடை : கால்டுவெல்
10.எந்த ஆண்டு அம்பேத்கர் பாரத ரத்னா விருது பெற்றார்?
விடை : 1990
போட்டித் தேர்வுகளுக்காக போட்டிபோட்டு படித்துக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் தொடர்ந்து இதுபோன்ற வினா விடைகளை சில சிலேட்டு குச்சி உங்களுக்கு வழங்கும்…..