டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான பொதுத் தமிழ் வினா விடைகள்
நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன..
அப்துல் கலாம்
அப்துல் கலாம் அவர்கள் கூறியது போலவாய்ப்புகள் எனக்கு என்பது அனைவருக்கும் உண்டு அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதுதான் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை முடிவு செய்கிறது..
வினா விடைகள்
1.தலைவனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி
விடை : ஐ
2.நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் என்று கூறியவர்
விடை : திரு.வி.க
3.இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே இது யாருடைய பாராட்டுரை
விடை : பாரதிதாசன்
4.தமிழகத்தில் இன்று காணப்படும் குடைவரை கோவில்களில் பழமையானது இவ்வூரில் உள்ளது?
விடை : பிள்ளையார்பட்டி
5.வனப்பு என்னும் சொல்லின் பொருள்
விடை : அழகு
6.லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி என்ற நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் பாடல் வடிவ நாடக நூல்
விடை : மனோன்மணியம்
7.தண்டலம் என்னும் ஊரின் முந்தைய பெயர்
விடை : துள்ளம்
8.அஞ்சலை அம்மாள் காந்தியடிகளால் எவவாறு அழைக்கப்பட்டார்?
விடை : தென்னாட்டின் ஜான்சிராணி
9.தழிஇ என்பதன் இலக்கணக்குறிப்பு
விடை : சொல்லிசை அளபெடை
10. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
விடை : ஜியுபோப்
தினமும் இது போன்ற வினா விடைகளை தெரிந்துகொண்டு நீங்கள் பயன்பெற சிலேட்டு குச்சி உங்களுக்கு உதவும்….